Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வாகன கொள்வனவிற்காக 30 கோடி ரூபா - சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப்புறம்பான செய்தி அரசாங்கம் அறிவிப்பு

முப்பது கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக சமூக தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


இவ்வாறான திட்டம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களுக்கும்இ முன்னாள் இராஜாங்க அமைச்சர்களுக்கும் மேலதிக எரிபொருள் கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

1. மூவாயிரம் இலட்சம் ரூபா (30 கோடி ரூபா) பெறுமதியான வாகனங்களை அமைச்சுக்களுக்காக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாக சமூக ஊடகங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் விளம்பரம் முழுமையாக உண்மைக்குப் புறம்பானதும் திரிவுபடுத்தப்பட்ட செய்தியாகும் என்றும் இவ்வாறான விடயங்களை உள்ளடக்கிய அமைச்சரவை ஆவணம் அல்லது அமைச்சரவைக்கான விடயம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் உயர் கல்வி,தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன உறுதிசெய்தார்.

2. கௌரவ அமைச்சர்களுக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களுக்கும் மேலதிக எரிபொருளை வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக முன்னெடுக்கப்படும் விளம்பரம் முழுமையாக உண்மைக்குப் புறம்பானதாகும்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கீழ்கண்ட விடயங்களை அமைச்சரவைப் பேச்சாளர் கௌரவ உயர்கல்வி தொழில் நுட்பம் புத்தாக்கம் மற்றும் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் உறுதிசெய்துள்ளார்.

'பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2015 –பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்களினால் தமது கட்சி, வேட்பாளர்களின் ஊக்குவிப்புக்காக உத்தியோகப்பூர்வ வாகனத்தை பயன்படுத்தல் அது தொடர்பில் அரசாங்கத்திற்கு பணத்தை செலுத்தும் தேவை' என்ற தொனிப்பொருளில் அப்போதைய நிதியமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட இலக்கம் 15ஃ1090ஃ613ஃ082 மற்றும் 2015 07.14 திகதியன்றும் 2015.07.22 திகதியன்றும் அமைச்சரவைத் தீர்மானத்தை முக்னோடியாக்கொண்டு கௌரவ பிரதமர் அவர்களினால் 2020 மார்ச் 18ஆம் திகதியன்று அமைச்சரவை ஆவணமொன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அமைச்சரவை ஆவணத்தின் மூலம் கௌரவ பிரதமர் பரிந்துரைத்துள்ளமையானது பிரதமர், சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர், அமைச்சர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோருக்கு இணைந்ததாக உத்தியோகப்பூர்வ வாகனம் மற்றும் உத்தியோகப்பூர்வ வீடு தமது கட்சியின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு அல்லது தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படுமாயின் உத்தியோகப்பூர்வ வாகனத்திற்கு மாதமொன்றிற்கு 1 இலட்சம் ரூபாவும் உத்தியோகப்பூர்வ வீட்டிற்காக மாதாந்தம் 1 இலட்சம் ரூபாவும் தமது சொந்த பணத்தில் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்பதுடன் அமைச்சரவையினால் இந்த பரிந்துரை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தேர்தல் நடைபெறும் திகதி ஒத்திவைக்கப்பட்டமை மற்றும் விருப்பு வாக்கு இலக்கம் இதுவரையில் வழங்கப்படாததினால் மேலே குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய திகதி; தொடர்பில் 2020 மே மாதம் 6 ஆம் திகதி அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதுடன் அதன் போது அமைச்சரவை தீர்மானித்தமை விருப்பு வாக்கு இலக்கம் வழங்கப்பட்டப் பின்னர் மாத்திரம் சம்பந்தப்பட்ட பணம் கௌரவ பிரதமர் , சபாநாயகர், எதிர்கட்சி தலைவர் ஆகியோரிடமும் அமைச்சர்களிடமும் அறவிடப்பட வேண்டும் என்பதாகும். அப்படியிருந்த போதிலும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் மேற்குறிப்பிட்ட வசதிகளை பயன்படுத்துவார்களாயின் அவர்களிடம் சம்பந்தப்பட்ட பணத்தை அமைச்சரவை தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி தொடக்கம் செல்லுபடியாகும் வகையில் அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

3. ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பீ.
ஜயசுந்தர அவர்களினால் அரச துறை பிரதானிகளுக்கு 2020 மே மாதம் 5ஆம் திகதி வெளியிடப்பட்ட தனிப்பட்ட வேண்டுகோள் தொடர்பில் பங்களிப்பு செய்வதற்கு எதிர்பார்க்கும் அரச அதிகாரிகளின் பூரணப்படுத்த வேண்டிய படிவமாக சுட்டிக்காட்டி சமூக ஊடக வலைப்பின்னல் ஊடாக பறிமாறப்படும் படிவம் போலியானதுடன் இவ்வாறான எந்தவொரு படிவமும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

ஜனாதிபதியின் செயலாளர் மேற்குறிப்பிட்ட கடிதத்தின் மூலம் தமது விருப்பத்தின் அடிப்படையில் மாத்திரம் மே மாத சம்பளத்தில் ஏதாவது பங்களிப்பை விதவை மற்றும் அநாதை சிறவர்களின் நிதியத்திற்காக மேற்கொள்ளுமாறு மட்டுமே குறிப்பிட்டுள்ளார் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.sor/nk

வாகன கொள்வனவிற்காக 30 கோடி ரூபா - சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப்புறம்பான செய்தி அரசாங்கம் அறிவிப்பு Reviewed by www.lankanvoice.lk on மே 09, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.