அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் {ACMC} காத்தான்குடி பிராந்தியத்திற்கான மத்திய குழு களைக்கப்பட்டு புதிதாக புணரமைப்பு செய்யப்படவுள்ளது
(எஸ்.எம்.ஸப்ரி)
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலத்தின் போது வட்டார ரீதியாக செயற்பட்டுக் கொண்டிருந்த எமது கட்சி கூட்டுப் பொறுப்பின் முக்கியத்துவம் கருதி பிரதேச ரீதியாக மத்திய குழுவாக இயங்கவேண்டியதன் தேவைப்பாட்டினை கருத்திற் கொண்டு தேர்தலிற்கு பிற்பாடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொறியியலாளர் கௌரவ அல்ஹாஜ் ரிசாட் பதியுத்தீன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ் அமீர்அலி அவர்களின் தலைமையிலும் வழிகாட்டலோடும் காத்தான்குடியிலுள்ள பத்து வட்டாரத்திலும் வட்டார கிளைகள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட அமைப்பாளர்கள், செயலாளர்கள், கொள்கைபரப்பு செயலாளர்கள், பொருளாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாக தெரிவு செய்யப்பட்ட நாட்பது உறுப்பினர்களை மத்திய குழு பொதுச்சபை உறுப்பினர்களாக உள்ளடக்கியதாகவும் வட்டார அமைப்பாளர்களையும் ஏனைய உறுப்பினர்களையும் சேர்த்து பதினொரு உறுப்பினர்களை உள்ளடக்கியதாக முகாமைத்துவ உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்ட மத்திய குழு கடந்த. 30/07/2018 அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.
அந்த வகையில் எமது மத்திய குழுவை இன்னும் சில மாற்றங்களோடும் அதேபோல் எமது மத்திய குழுவின் எல்லைப் பரப்பினையும் விஸ்தரிக்கும் வகையிலும் காத்தான்கூடியில் உள்ள பத்து வட்டாரங்களுடன் இணைத்ததாக மஞ்சந்தொடுவாய் வட்டாரம் பூனொச்சிமுனை, கோட்டமுனை உள்ளடக்கிய முஸ்லிம் பகுதிகள் மற்றும் பாலமுனை, காங்கேயனோடை அடங்களாக கர்பலா,மன்முனை, சிகரம்,கீச்சான் பள்ளம், ஒல்லிக்குளம்,ஆகிய முஸ்லிம் பிரதேசங்கள் அனைத்தையும் உள்வாங்கப்பட்ட ஒரு மத்திய குழுவினை தெரிவுசெய்து செயற்படுவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இதற்கான முன்னெடுப்புக்கள் கட்சி தலைமைகளின் ஆலோசனைக்கு அமைவாக எமது காத்தான்குடி மத்திய குழுவினால் நடைபெற்றுக் கொண்டுள்ளதுடன் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை நிறைவுக்கு வந்தவுடன் விரைவில் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களை உள்ளடக்கியதாக ஒரு மத்தியகுழு தெரிவு செய்யப்படவுள்ளது அதற்கு முன்பதாக வெற்றிடமாகவுள்ள சில வட்டாரங்களில் வட்டார கிளைகளையும் அதற்கான அமைப்பாளர்கள் உள்பட உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
(இது சம்பந்தப்பட்ட மேலதிகு தகவல்களுக்கு
Mobile-0754351139)
சென்றமுறை தெரிவு செய்யப்பட்ட காத்தான்குடி பிராந்திய மத்திய குழு உறுப்பினர்கள் நாற்பது அதில் கீழ்வரும் உறுப்பினர்கள் பதினொருபேர் முகாமைத்துவ குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டதுடன் மேலும் இருபத்து ஒன்பது பேர் மேலதிகமாக உள்வாங்கப்பட்டு நாட்பது பேர் கொண்ட மத்திய குழு நியமிக்கப்பட்டனர்.
அதில் அமைப்பாளராக மத்திய குழு தீர்மானத்திற்கு அமைவாக நகரசபையில் எமது கட்சி சார்பாக இருக்கும் கௌரவ உறுப்பினரே எமது மத்திய குழுவிற்கும் அமைப்பாளராகவும் செயற்படவேண்டும் என்ற தீர்மானத்திற்கு அமைவாக தற்போதைய எங்கள் கட்சி சார்பில் இரண்டாம் வருட சுழற்சி முறை நகரசபை உறுப்பினராக பதவி வகித்து 14/05/2020 ம் திகதி பதவி விலகிய கௌரவ முன்னாள் நகரசபை உறுப்பினர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ் ரீ.எல்.ஜவ்பர்கான் ஜே.பீ அவர்கள் அமைப்பாளராக செயற்பட்டுக் கொண்டிருந்தார் *(அவரது கால எல்லை இம்மாதம் 14ம் திகதியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி முடிவடைந்தது)* அதேபோல் இம்மாதம் மூன்றாம் வருட சுழற்சி முறை உறுப்பினராக எமது கட்சி சார்பாக நகரசபைக்கு நியமிக்கப்படவுள்ள கவிஞர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.முகைதீன் சாலி அவர்கள் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக எமது கட்சியின் மத்திய குழு அமைப்பாளராகவும் அவரது ஒரு வருட சுழற்சி முறை நகரசபை உறுப்பினர் பதவிக்காலம் வரையும் செயற்படவுள்ளதுடன் அடுத்துவரும் நபர் அதே ஒழுங்கின்படி நகரசபை உறுப்பினராகவும், அமைப்பாளராகவும் நியமிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற வருடம் தெரிவு செய்யப்பட்ட முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் விபரம்
-------------------------------------------
1)அமைப்பாளர்- TL.ஜவ்பர்கான்(JP)
2)பிரதி அமைப்பாளர்-MC.ஜலால்தீன்(JP)
3)செயலாளர்-SM.ஸப்ரி
4)பிரதி செயலாளர்-JM.பஹத்
5)கொள்கை பரப்பு செயலாளர்-MSM.முகைதீன் சாலி
6)பொருளாளர்-AMM.மாஹிர்(JP)
7)கல்வி/கலாச்சார இணைப்பாளர்-MTM.யூனூஸ்(JP)
8)தொழில் சங்க இணைப்பாளர்-MA.ரஸீட்(JP)
9)மீன்பிடி இணைப்பாளர்-PM.றசாக்
10)இளைஞர் இணைப்பாளர்-MIM.மபாஸ்
11)மகளிர் இணைப்பாளர்-NMM.பாய்ஸ்
(மேற்குறிப்பிட்ட பதவியில் இருந்த ஓர் இருவர் தற்போது எமது மத்திய குழுவில் செயற்பாட்டில் இல்லை அதேபோல் இம்முறை காத்தான்குடியை அன்டிய முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள வட்டாரங்களும் இதனுடன் உள்வாங்கப்படுவதால் இந்த எண்ணிக்கையில் சற்று மாற்றம் ஏற்பட்டு மத்திய குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது)
எஸ்.எம்.ஸப்ரி
செயலாளர்
மத்திய குழு
அ.இ.ம.காங்கிரஸ்
காத்தான்குடி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் {ACMC} காத்தான்குடி பிராந்தியத்திற்கான மத்திய குழு களைக்கப்பட்டு புதிதாக புணரமைப்பு செய்யப்படவுள்ளது
Reviewed by www.lankanvoice.lk
on
மே 19, 2020
Rating:

கருத்துகள் இல்லை: