கலாநிதி சுக்ரி அவர்களது மரணச் செய்தி கேட்டு நாம் ஆழ்ந்த கவலையும் துக்கமும் அடைகிறோம்." கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
"கலாநிதி சுக்ரி அவர்களது மரணச் செய்தி கேட்டு நாம் ஆழ்ந்த கவலையும் துக்கமும் அடைகிறோம்." - என முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் குறிப்பிட்டார்
கலாநிதி சுக்ரி அவர்கள் ஜாமிஆ நளீமியாவினுடைய ஸ்தாபகராகவும், இறுதி மூச்சுவரை அக்கலாபீடத்தினுடைய அபிவிருத்தியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்ட ஒருவர்.
காலம் சென்ற மதிப்பிற்குரிய மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்களுடன் இணைந்து அவர்களது பொருளாதாரத்தில் இருந்து மிகச்சிறந்த கல்வி சமூகத்தை இந்த நாட்டில் கட்டியெழுப்ப வேண்டும் என்று இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை உருவாக்கி நாடு முழுவதிலும் சென்று முஸ்லீம்கள் மத்தியிலே கல்வியிலே ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பாடுபட்ட ஒருவர்.
ஜாமிஆ நளீமியாவை உருவாக்குவதிலே முழுமையாக நளீம் ஹாஜியார் அவர்களுடன் நின்று அதனை உருவாக்கி மிகச் சிறந்த கலாபீடமாக கல்வியிலும், சமூக ரீதியிலும் அந்தஸ்த்துள்ள ஒரு நிறுவனமாக மாற்றுவதிலே இரவு பகலாக பாடுபட்ட ஒரு சகோதரர்.
இலங்கை முஸ்லீம்களுடைய வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலே வரலாறு தொடர்பான பல நூல்களை எழுதிய ஒரு மிகப்பெரிய ஒரு மனிதர்.
இச்சமூகத்திற்காகவே வாழ்ந்து தனக்காக எதையும் சேர்க்காமல் சமூகம், சமூகம் என்று வாழ்ந்த ஒரு மிக்பெரிய மனிதரை நாம் இழந்து இருக்கின்றோம்.
இப் புனிதமான றமழான் மாதத்திலே அவரை நாம் இழந்து இருக்கின்றோம். அழ்ழாஹ்விடத்தில் அவருக்காக நாம் பிரார்த்திப்போமாக. அழ்ழாஹுத்தாலா அவர்களது நல்லமல்களை அங்கீகரிக்க வேண்டும்.
அவர்களது கப்ரை சுவர்க்கப் பூஞ்சோலையாக மாற்ற வேண்டும். அவர்களது குடும்பத்திற்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
அவர்களுக்குப் பின்னரும் அவர்களது பணிகள் எவ்விதத் தடங்கலும் இன்றி தொடரவேண்டும்.
கலாநிதி சுக்ரி அவர்களது மரணச் செய்தி கேட்டு நாம் ஆழ்ந்த கவலையும் துக்கமும் அடைகிறோம்." கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ்
Reviewed by www.lankanvoice.lk
on
மே 19, 2020
Rating:

கருத்துகள் இல்லை: