அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி அமைப்பாளரானார் கவிஞர் எம்.எஸ்.எம்.முகைதீன் சாலி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி அமைப்பாளரானார் கவிஞர் எம்.எஸ்.எம்.முகைதீன் சாலி LLB(R) அவர்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி நகரசபை முன்னாள் உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.மாஹிர் JP அவர்கள் தனது நகரசபை உறுப்பினர் பதவியை ஒரு வருடத்தில் இராஜினாமா செய்ததையடுத்து புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்ட அல்ஹாஜ் ரீ.எல்.ஜஃபர்கான் JP அவர்கள் 14 மாதங்களில் தனது கௌரவ நகரசபை உறுப்பினர் பதவியினை கடந்த 14ம் திகதி இராஜினாமா செய்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து அந்த வெற்றிடத்திற்கு புதிய சுழற்சி முறையிலான நகரசபை கௌரவ உறுப்பினராக அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.முகைதீன் சாலி LLB(R) அவர்கள் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த உறுப்பினர்கள் அவர்களது ஒரு வருட பதவிக்காலத்தில் வகித்து வந்த
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி அமைப்பாளர் பதவியும் அவர்களது இராஜினாமாவுடன் முடிவுறுவதால் காத்தான்குடியின் புதிய அமைப்பாளராக அல்ஹாஜ் MSM.முகைதீன் சாலிLLB(R) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே ஒழுங்கிலே அடுத்து வரும் நான்காம் வருட சுழற்சி முறை உறுப்பினரான ஜனாப் எஸ்.எம்.ஸப்ரி அவர்கள் அவரது நகரசபை உறுப்பினர் பதவிக்காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காத்தான்குடி அமைப்பாளராகவும் செயற்படவுள்ளார்.
எஸ்.எம்.ஸப்ரி
செயலாளர்
மத்திய குழு
அ.இ.ம.காங்கிரஸ்
காத்தான்குடி.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி அமைப்பாளரானார் கவிஞர் எம்.எஸ்.எம்.முகைதீன் சாலி
Reviewed by www.lankanvoice.lk
on
மே 19, 2020
Rating:

கருத்துகள் இல்லை: