Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பு.


அல்ழாஹ் நமக்கு தந்தவற்றில் இருந்து அவன் வழியில் வாரி வழங்குவோம்..

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்.......

கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக காத்தான்குடியில் இயங்கி வரும்          கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பு இலங்கையில் சகல பாகங்களிலுமுள்ள வலது குறைந்த உடல்,உள குறைபாடுகளான சுயமாக இயங்க முடியாத, செவிப்புலனற்ற, வாய் பேச முடியாத ஏறக்குறைய 40 மாணவ, மாணவிகளை  விடுதியில் தங்கவைத்து  அவர்களுக்கான உணவு, உடை இருப்பிட வசதிகள் செய்து கொடுத்து பராமரித்து வருவதை தாங்கள் அறிவீர்கள்.

இவர்களுக்கான ஒரு நாள் செலவிற்கு ரூபா. 5000/-(ஐயாயிரத்திற்கு) மேற்பட்ட தொகை தேவைப்படுகின்றது 

இத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இவ் அமைப்பிற்கு தங்களினால் வழங்கப்படுகின்ற மாத சந்தா, ஸதக்கா, ஸக்காத் போன்ற நிதி உதவிகளைக் கொண்டு பராமரித்து வருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.

தற்போது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள (கொவிட் 19) கோறோனா நோயினால் நாடு முழுவதும் அன்றாட செயற்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் தங்களினால் வருடா வருடம் இப் புனித றமழான் மாதத்தில் வழங்கப்படுகின்ற ஸக்காத், ஸதக்கா உதவிகளை தங்களுடைய வியாபார நிலையங்களுக்கும், வீடுகளுக்கும் நேரடியாக வந்து பெற்றுக் கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளதால், ஒவ்வொரு வருடமும் இப் புனித றமழான் மாதத்தில் தாங்கள் இவ் அமைப்பிற்கு வழங்கி வருகின்ற நன்கொடைகள்,  ஸக்காத், ஸதக்கா, அரிசி போன்ற பங்களிப்புக்களை இம் முறையும் எமது டீன் வீதி, காத்தான்குடி-06 என்னும் முகவரியில் அமைந்துள்ள எமது காரியாலயத்தில் ஒப்படைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். 

வரமுடியாதவர்கள் எமது அமைப்பின் முகாமை யாளருடன் தொடர்பு கொண்டால் தங்கள் வீடுகளுக்கு வந்து பெற்றுக் கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அல்லது எமது கீழ் உள்ள வங்கிக் கணக்கில் வைப்பில் இட்டு தங்களுடைய பங்களிப்புக்களை இப்புனித றமழான் மாதத்தில் இவ்வமைப்பிற்கு வழங்கி உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு.....

ஜனாப்.M.A.மஃறூப்
(முகாமையாளர்) தொலைபேசி இல. 
0771361646 / 065-2245089.

வங்கி கணக்கிலக்கம்
அமானா வங்கி – 
010-0040640-001*    காத்தான்குடி கிளை.

மக்கள்வங்கி -   
065-100110000508
காத்தான்குடி கிளை.

*அல்ழாஹுதஆலா உங்கள் அனைவரினதும் வாழ்விலும், தொழிலிலும், பொருளாதாரத்திலும், செல்வத்திலும் இரட்டிப்பான பறக்கத்துகளைத் தந்தருள் வானாக.*

ஜஸாக்குமுல்ழாஹுஹைறா.  வஸ்ஸலாம்.

இவ்வண்ணம்
தலைவர் /செயலாளர்,
இஸ்லாமியவலது குறைந்தோர்நலன்புரி அமைப்பு.
காத்தான்குடி-06

கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பு. Reviewed by www.lankanvoice.lk on மே 08, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.