Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மண்ணுக்கான புதிய அனுமதிப்பத்திரம் நடைமுறை


புதிய அரசாங்கத்தினால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட மணல் ஏற்றிச்செல்வதற்கான வீதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய பிரச்சனைகளையும் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்நோக்கியிருந்தமை யாவரும் அறிந்த விடையமே.

புதிய நடைமுறையானது கடந்த 11-05-2020 முதல் நடைமுறைக்குகொண்டுவரப்படவுள்ளதாக புவிசரிதவியல் கனியவள திணைக்கள பிராந்திய பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பாரிஸ் குறிப்பிட்டார் அவர் மேலும் கூறுகையில் புதிய சுற்று நிருபத்தினுடாக புதிய சட்டத்தினுடாக வாகனங் களின் இலக்கங்களை மண் அனுமதிப்பத்திர உரிமையாளரே அனுமதிப்பத்திரத்தில் போட்டுக்கொள்ளமுடியும் எனவும் அடுத்து மணல் ஏற்றிச் செல்வதற்கான வீதியினை அனுமதிப்பத்திர உரிமையாளர்கள் தீர்மானித்து போடமுடியும் எனவும் அத்தோடு வழங்கப்படவுள்ள கீயூப்புக்களை வார நாட்களுக்குள் எப்படியாவது ஏற்றிக்கொள்ளமுடியும் எனவும் குறிப்பிட்டார்.

அனுமதிப்பத்திர உரிமையாளர்களின் அசௌவ்கரியங்களை தவிர்க்கும் முகமாக இந்த புதியநடமுறையினை புவிசரிதவியல் கனியவள திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இந்த நடைமுறையினை தொடர்ந்து நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான சகலவிதமான நடவடிக்கையினையும் மாவட்டகாரியாலயத்தினுடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொறியலாளர் எம்.ஆர்.எம்.பாரிஸ் குறிப்பிட்டார்  

மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டது தற்காலிகமாக மண் அகழ்வு நடவடிக்கையை நிறுத்துமாறு அவ்வாறான தீர்மானங்களையும் மிறி மண் அகழ்வு நடைபெற்றவண்ணம் இருந்தது இதனை பொலிஸ் திணைக்களத்தினால் கூட சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மண்ணுக்கான புதிய அனுமதிப்பத்திரம் நடைமுறை Reviewed by www.lankanvoice.lk on மே 13, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.