Covid 19 காத்தான்குடி தள வைத்தியசாலையிலிருந்து மேலும் ஆறு பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைப்பு.
ஊடகவியலாளர்.
ஏ.எல்.டீன்பைரூஸ்
Covid-19 காத்தான்குடி தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஆறு பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி தள வைத்தியசாலையில் இதுவரை சிகிச்சை பெற்று வந்த ஏழு பேரில் ஆறு பேர் இன்று (13) புதன்கிழமை காலை தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் மாத்திரம் வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
2020 ஏப்ரல் மாதம் தொடக்கம் காத்தான்குடி வைத்தியசாலையில் இயங்கி வரும் Covid 19 கொரோனா தெற்று நோய் பராமரிப்பு சிகிச்சை நிலையத்திற்கு கட்டம் கட்டமாக அழைத்துவரப்பட்ட 62 நோயாளிகளில் 55 பேர் பூரண சுகம் பெற்று சென்ற (10.05. 2020 ஞாயிறு) தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் மீதமாக சிகிக்சை பெற்று வந்த 7 பேரில் 6 பேர் இன்று (13.05.2020 புதன்) காலை பூரணசுகம் அடைந்து தங்களது வீடுகளுக்கு இராணுவத்தினரின் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது தெரிவித்தனர்.
இவர்களுள் நான்கு பேர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் முஸ்லிம் என்பதுடன் வைத்தியசாலையில் ஒருவர் மாத்திரமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Covid 19 காத்தான்குடி தள வைத்தியசாலையிலிருந்து மேலும் ஆறு பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைப்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
மே 13, 2020
Rating:

கருத்துகள் இல்லை: