காத்தான்குடி கோட்டத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து கையளிக்கும் நிகழ்வு.
ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன்பைரூஸ்
காத்தான்குடி கோட்டத்திலுள்ள 32 பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரிய வள நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள், உத்தியோகஸ் தர்களுக்குமான உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து கையளிக்கும் நிகழ்வு இன்று (15.05.2020 வெள்ளி) காலை11.00 காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி M.M.கலாவுதீன்.BA தலைமையில் ஆசிரிய வள நிலையத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் Dr.SMM. உமர்மெளலானா,மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்திய சாலையின் வைத்தியர் DrT.தேவதா மற்றும் பாடசாலையின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
மஞ்சந் தொடுவாய் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்திய சாலையினால் மேற்படி மருந்தினை கட்டம் கட்டமாக பல திணைக்களங்கள், படையினர், பொதுமக்கள் என பலருக்கும்
ஆயுர்வேத மருந்தினை பயன்படுத்துவது ஊடாக கிடைக்கும் அதிகளவான நன்மைகள், இதனை பயன்படுத்தும் முறை தொடர்பான விளக்க உரையினை மஞ்சந் தொடுவாய் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்திய சாலையின் வைத்தியர் Dr.T.தேவதா வினால் நிகழ்த்தப்பட்டன.
மேற்படி ஆயுர்வேத மருந்தானது கொரோனா நோய் தாக்கத்திற்கு மாத்திரமின்றி ஏனையை சில நோய்களுக்குமான நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதாகவும் இதன்போது Dr.T.தேவதா தெரிவித்தார்.
காத்தான்குடி கோட்டத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து கையளிக்கும் நிகழ்வு.
Reviewed by www.lankanvoice.lk
on
மே 15, 2020
Rating:

கருத்துகள் இல்லை: