Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.!! சீனா பகிரங்க எச்சரிக்கை..!



அமெரிக்காவோடு இணைந்து சீனாவுக்கு எதிராக அவுஸ்திரேலியாவும் செயல்படுமாயின் கடும் விளைவுகள் ஏற்படும் என்பதோடு, தக்க பதிலடியையும் கொடுப்போம் என சீனா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகை உலுகிக் கொண்டிருக்கிறது. தற்போது வரை உலகம் முழுதும் 34, 01,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 39 ஆயிரத்து 604 பேர் பலியாகியுள்ளனர்.இந்நிலையில், உலகில் கொரோனாவை சீனா பரப்பியதால் 184 நாடுகள் நரக வேதனை அனுபவித்து வருவதாகவும், இதற்காக சீனாவுக்கு எதிராக இயன்றதை செய்வேன், என்னால் அதிகம் செய்ய முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகப் பேசியிருந்தார்.



இதற்கிடையில், அமெரிக்க செனட் சபையினரும் சீனாவுடனான வர்த்தக சார்பைக் குறைத்துக் கொள்ள நடவடிக்கை தேவை என்று ட்ரம்புக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில் கொரோனா வைரசை, பல்வேறு நாடுகளுக்கும் சீனா பரப்பி விட்டதாகவும், இந்த விவகாரத்தில், சீனாவுக்கு ஆதரவாக, உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டதாகவும், அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு, அவுஸ்திரேலியா ஆதரவு தெரிவித்தது.

இதனையடுத்து, சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது சீனா குறித்த விசாரணை தேவை என்ற ரீதியில் அமெரிக்காவுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியா பேசியுள்ளது.

இது தொடர்பாக சீனா தெரிவிக்கும்போது, “சீன தூதரகம் சிறுமைத்தனமான தந்திரங்களை மேற்கொள்ளாது. இது எங்கள் மரபு கிடையாது. ஆனால் மற்றவர்கள் செய்தால் நாங்கள் திரும்ப பதிலடி கொடுப்போம்.சீனாவின் நுகர்வோர்கள் அவுஸ்திரேலியப் பொருட்களை கைவிடுவார்கள்.

பல்கலைக்கழகங்களும் சிக்கலாகும், சீன மாணவர்களும், சுற்றுலா பயணிகளும், அவுஸ்திரேலியா வருவதை புறக்கணிப்பர்.அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டு இறைச்சி மற்றும் வைன் மது வகைகளுக்கு சீனா தடை விதிக்கும்” என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.!! சீனா பகிரங்க எச்சரிக்கை..! Reviewed by www.lankanvoice.lk on மே 03, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.