திட்டமிட்டவாறு மே 11ல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதில் சிக்கல்..!!
திட்டமிட்டவாறு மே 11ல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதில் சிக்கல்
கல்வி உயரதிகாரிகள் தீவிர ஆலோசனை.
பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படும்போது கல்வி நடவடிக்கைகளைத் திட்டமிடுவது குறித்து கல்வி அமைச்சகம் மாகாண அளவிலான விவாதங்களைத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பில் தெற்கு, வட மத்திய மற்றும் வடமேற்கு பிராந்திய மட்ட அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டுள்ளது.
மேலும் கல்வி அமைச்சக செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்தா தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் முத்தரப்புப் பணியாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் பள்ளிகளை கிருமி நீக்கம் செய்வார்கள்.கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின்போது பாடசாலைகள் மே 11 அன்று மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மாற்றியமைத்ததுள்ளது.
இதற்கமைய ‘மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் திகதி மேலும் தாமதமாகுவதற்கே வாய்ப்புகள் உள்ளது. நாட்டின் நிலைமைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் உறுதியாக மாற்றம் ஏற்படுமா, இல்லையா, பாடசாலைகள் மீண்டும் எப்போது ஆரம்பிக்கப்படும் என திடமாக கூறமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.sor/nl
திட்டமிட்டவாறு மே 11ல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதில் சிக்கல்..!!
Reviewed by www.lankanvoice.lk
on
மே 03, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மே 03, 2020
Rating:

கருத்துகள் இல்லை: