Covid 19 ஊரடங்கு நேரங்களில் பிரயாணங்கள் மேற்கொள்வோர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறப்பித்த காலப்பகுதிக்குள் தமது வியாபார தேவைகள்,வேறு தேவைகளின் காரணமாக வெளிமாவட்டங்களுக்கு செல்ல நேரிடும் போது கட்டாயம் உங்கள் பகுதி சுகாதார வைத்திய அதிகாரி(MOH), அல்லது பொது சுகாதார பரிசோதர் (PHI) அதிகாரிகளிடம் பரிசோதனைக்கு உட்படுத்தி தனக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களின் அறிவுரைக்கு அமைய சான்றிதழை பெற்று உங்கள் பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பதி காரியிடம் ஊரடங்கு காலத்தில் பிரயாணம் செய்யும் அனுமதி (Curfew Pass) பெற்றுக் கொண்டு பயணிக்கும் போதுதான் அது ஏற்றுக் கொள்ளக் கூடிய அனுமதி நடைமுறையாக இருக்கும்.
சில பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் வேலைப்பளுக்களில் இருக்கும் சந்தர்ப்பங்களில் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி (Branch OIC) இடம் அனுமதி பெற்று றப்பர் முத்திரை இட்டு தங்கள் பிரயாணத்தை மேற்கொள்ளும் போது சில வீதித்தடை பொலிஸ், இராணுவத்தரின் பரிசோதனைக்கு உட்படும் போது அத்தகைய அனுமதிப் பத்திரம் (Pass) ஏற்றுக் கொள்ளப்படாது திருப்பி அனுப்படும் சம்பவங்களும் சில இடங்களில் நடைபெற்றுள்ளன.
அதனால் பிரயாணிகள் தேவையற்ற அசௌ கரியங்களுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகக் கூடியதாக இருக்கின்றது. இத்தகைய (Pass) பெறும் நடைமுறை முறை யானதுமல்ல.
எனவே நீங்கள் இத்தகைய (CurfewPass) இனை பெறுவதற்கு பொலிஸ் நிலையம் செல்லும் போது நிலையப் பொறுப்பதிகாரி நிலையத்தை விட்டு வெளியில் இருந்தாலோ, அல்லது வேலைப்பளுவில் இருந்தாலோ அத்தகைய (Pass) இனைப் பெறும் போது இரண்டாம் நிலை பதில் நிலையப் பொறுப் பதிகாரியிடம் அனுமதி பெற்று அவரின் ஒப்பிட்டு, இடப்பட்ட றப்பர் முத்திரை நிலையப் பொறுப்பதி காரியுடைதுதானா.....? என்று உறுதிப்படுத்திக் கொளுங்கள்.
ஒரு வேளை அவர் பிரிதிவகிக்கும் விசாரணைப் பிரிவு (Branch OIC) றப்பர் முத்திரை இடப்பட்டு தரப்படும் போது அதனை ஏற்க மறுத்து நிலையப் பொறுப் பதிகாரியின் றப்பர் முத்திரை (PoliceStation OIC) இனை இட்டுத் தருமாறு கேட்டு முறையாகப் பெற்று உங்கள் பிரயான அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
MI.Abdul wahab (IP)
Covid 19 ஊரடங்கு நேரங்களில் பிரயாணங்கள் மேற்கொள்வோர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.
Reviewed by www.lankanvoice.lk
on
மே 02, 2020
Rating:

கருத்துகள் இல்லை: