முகநூலில் வெளியிட்ட போலிச் செய்திக்கு எதிராக முறைப்பாட்டினை செய்தார் சட்டத்தரணி ஹபீப் றிபான்
கடந்த 11.05.2020ம் திகதி Nismad Raaze என்ற முகநூல் கணக்கினூடாக ‘பிறைந்துரைச்சேனை குஜராத் எனும் இடத்தில் குளிசையில் பிடிபட்ட பெண்னை ரூ.25,000 பணத்தினை பெற்றுக் கொண்டு சட்டத்தரணி ஹபீப் றிபான் பிணையில் விட்டுள்ளார். என்பதாக போலிச் செய்தி ஒன்று வெளியிடப்பட்டு குறித்த செய்தி சுமார் 20ற்கு மேற்பட்ட முகநூல் கணக்குகள் மூலம் முகநூலில் பகிரப்பட்டுள்ளது.
இவ்வாறான போலிச் செய்தியினை நீதிமன்றத்தின் நற்பெயருக்கும் எதிராக வெளியிட்ட அந்த முகநூல் கணக்கிற்கு எதிராகவும் அச் செய்தியினை தனது முகப்புத்தக கணக்கினூடாக பகிர்ந்து கொண்டவர் களுக்கெதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலயத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டு, வாழைச்சேனை நீதிவான் மாவட்ட நீதிமன்ற பதிவாளருக்கும் அறியப்படுத்தியிருந்தார்.
சட்டத்தரணி ஹபீப் றிபான் இதன்போது சட்டத்தரணி சஹாப்தீன், சட்டத்தரணி றம்ஸீன், சட்டத்தரணி சித்தீக், சட்டத்தரணி றியாஸ், சட்டத்தரணி றஸ்மின் மற்றும் சனூஸ் LLB ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
மேலும் சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவிக்கையில் இவ்வாறான போலிச் செய்திகள் நீதித்துறை அவமதிக்கும் செயற்பாடாக காணப்படுவதோடு நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்துள்ள மதிப்பினை இல்லாமல் ஆக்கும் செயலாக காணப்படுகின்றது
மேலும் நான் பதில் நீதபதியாக கடைமையாற்றிய காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளை செய்யவில்லை என்பதுடன் பொதுதேர்தலுக்கு வேட்பாளாராக நியமணம் செய்யபட்ட 19.03.2020 திகதிக்குப் பின்னரான காலப்பகுதியில் நான் பதில் நீதிபதியாக இருக்கவில்லை என்பதனையும் அறியத்தருகின்றேன்.
மேலும் நான் பொதுத்தேர்தலில் போட்டியிட்டதன் பின்னர் அனேகமான போலிக் கணக்குகள் திறக்கப்பட்டிருப்பதாகவும் அவைகளினூடாக பல்வேறுபட்ட வகைகளில் எனக்கெதிரான எழுதப்படுகின்றது. அவைகளை நான் அலட்டிக்கொள்ளவில்லை எனவும் நீதித்துறையினை மதிக்கின்றவன் என்ற அடிப்படையில் நீதித்துறை சுதந்திரத்தினை கேள்விக்கு உட்படுத்திய பின்னரே நான் குறித்த முறைப்பாடு செய்திருக்கின்றேன்.
மேலும் கல்குடாவின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக மாத்திரமே பெற முடியும் என்பதோடு அதனூடாக எமது பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தூய நோக்கத்துடன் மாத்திரமே எனது கௌரவ பதில் நீதிவான் பதவியினையும் துறந்து இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளேன் என்றும் தெரிவித்தார்.
குறித்த முறைப்பாட்டினை ஏற்ற பொலிஸார் குற்றம் புறிந்த அனைவருக்கெதிராகவும் (Cyber crime) ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் சட்டத்தரணிகள் முன்பதாக கூறியிருந்தனர்.
முகநூலில் வெளியிட்ட போலிச் செய்திக்கு எதிராக முறைப்பாட்டினை செய்தார் சட்டத்தரணி ஹபீப் றிபான்
Reviewed by www.lankanvoice.lk
on
மே 14, 2020
Rating:

கருத்துகள் இல்லை: