Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடந்த வாரத்திலும்பார்க்க சற்று குறைவடைந்துள்ளது


மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜுன் 19 ஆந் திகதி தொடக்கம்; 2020 ஜுன் 26 ஆந் திகதி வரையும் 16 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் 07 பேரும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 06 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அது போன்று கோறளைப் பற்று மத்தி வாழைச்சேனை பிரிவில் 2 நோயாளர்களும், வாழைச்சேனை பிரிவில் ஒருவருமாக மொத்தம் 16 பேர் மாவட்டத்தில் இனங் காணப்பட்;டுள்ளனர்.   

இருப்பினும் வாகரை, செங்கலடி, மட்டக்களப்பு, வவுனதீவு, காத்தான்குடி, பட்டிப்பளை, வெல்லாவெளி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.


மேலும் கடந்த சில மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த  ஒரு மரணங்களும் பதிவாகவில்லையென வைத்தியர் வே. குணராஜசேகரம் தெரிவித்தாh.

மேலும்  கடந்தவாரம் 16 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் நாட்டில் பொதுவாக டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஏறாவூர்மற்றும் ஓட்டமாவடி பிரதேச மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் இபருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே. குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடந்த வாரத்திலும்பார்க்க சற்று குறைவடைந்துள்ளது Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 06, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.