ஊடகத் துறையில் AI யின் பயன்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற செயலமர்வு.
(எம்.பஹத் ஜுனைட்)
கிழக்கு மாகாணத்தில் சமூக வலுவூட்டல் திட்டங்களைச் செயற்படுத்திவரும் 'பிஸிலங்கா' சமூகத் தொழில்முனைவு நிறுவனம் மற்றும், 'நாஸ் கெம்பஸ்' ஆகியன இணைந்து ஊடகவியலாளர்களுக்கான நவீனகால சவால்களுக்கு முகங்கொடுத்து நாட்டினைக் கட்டியெழுப்பும் விதமாக Artificial intelligence (AI) பற்றிய வழிகாட்டல் செயலமர்வு ஞாயிற்றுக் கிழமை (27) காத்தான்குடி நாஸ் கெம்பஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் 'AI யோடு விளையாடு...' என்ற தலைப்பில் இச் செயலமர்வில் பிஸிலங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் கே.எம்.மஸாஹி, விஜ் பெரி நிறுவனத்தின் பணிப்பாளர் ரிகாஸ் ஆகியோர் விரிவுரை வழங்கியதுடன் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயண்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஊடகத் துறையில் AI யின் பயன்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற செயலமர்வு.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 27, 2025
Rating:

கருத்துகள் இல்லை: