எதிர்க் கட்சி தலைவரின் இணைப்புச் செயலாளராக தமிழ்பெண் நியமனம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸவின் இணைப்புச் செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் வைத்து இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தின் போது கட்சியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்குக் கிழக்கு தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை பிரதிபலிக்கும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு - கிழக்கு மக்களின் பிரச்சினைத் தெளிவுபடுத்தும் ஊடக பேச்சாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க் கட்சி தலைவரின் இணைப்புச் செயலாளராக தமிழ்பெண் நியமனம்!
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 08, 2020
Rating:

கருத்துகள் இல்லை: