கல்வியாளர் றினோஸின் அடைவு மண்ணுக்கும், மாவட்டத்திற்கும் கிடைத்த வெற்றியாகும் பிரதேச கல்விப்பணிப்பாளர் கலாவுதீன்.
ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்
ஆசிரியர் எம்.எச்.எம் றினோஸின் இன்றைய கல்வி அடைவு மண்ணுக்கு,
மாவட்டத்திக்கும் கிடைத்த வெற்றியாகும் என
காத்தான்குடி பிரதேச கல்விப்பணிப்பாளர்
எம்.எம்.கலாவுதீன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்னமுனைப்பற்று
காங்கேயனோடை கிராமத்தை பிறப்பிடமாகவும், காத்தான்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியர் எம்.எச்.எம்.றினோஸ்
இலங்கை கணக்காளர் சேவை தரம்-3 திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்து கணக்காளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் வணிகக் கல்வி பாட ஆசிரியரான எம்.எச்.எம்.றினோஸ் கற்றல், கற்பித்தலில் மிகவும் சிறப்பாக செயற்படுபவர். அவரின் இன்றைய அடைவுக்காக எமது கல்வி வலயம் சார்பாக நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கின்றேன்.
மேலும்........
தான் கல்வியில் பல அடைவுகளை அடையவேண்டும் அதனூடாக சிறப்பான பணி செய்யவேண்டும் என்ற கனவோடு பயணிக்கும்
M.H.M.Rinos இன் பயணம் தொடர காத்தான்குடி பிரதேச கல்விப்பணிப்பாளர் என்ற
ரீதியில் வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
கல்வியாளர் றினோஸின் அடைவு மண்ணுக்கும், மாவட்டத்திற்கும் கிடைத்த வெற்றியாகும் பிரதேச கல்விப்பணிப்பாளர் கலாவுதீன்.
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 20, 2021
Rating:

கருத்துகள் இல்லை: