கொரோனா சடலம் புதைப்பு விவகாரத்தில் மீண்டும் பிரதமர் மஹிந்தவின் சர்ச்சை பேச்சு!
கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைக்க முடியும் என்று தான் முன்னதாக பாராளுமன்றத்தில் வௌியிட்ட கருத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியாயப்படுத்தியுள்ளார்.
தான் அந்த கருத்தை தான்தோன்றித் தனமாகக் கூறிவில்லை எனவும் சுகாதார அமைச்சின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாக வைத்தே கூறியதாகவும் பிரதமர் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியும் எனவும் சுகாதார அமைச்சின் நிபுணர் குழு 9 பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
எனினும் பிரதமரின் இந்த கருத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் நிராகரித்திருந்ததுடன் பிரதமரின் பாராளுமன்ற கருத்து திரிபுபடுத்தப்பட்டு வௌியிடப்பட்டதாக பொதுஜன பெரமுன கட்சியினர் தெரிவித்திருந்தனர்.
LNW.
கொரோனா சடலம் புதைப்பு விவகாரத்தில் மீண்டும் பிரதமர் மஹிந்தவின் சர்ச்சை பேச்சு!
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 21, 2021
Rating:

கருத்துகள் இல்லை: