பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிழ் நஸீர் அஹமதின் அழைப்பில்சுகாதார சேவைகள் பணிப்பாளர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இன்று விஜயம்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை மக்களின் தேவை கருதி முழுமையாக இயங்க வைப்பதற்கான சாத்தியங்களை ஆராயும் நோக்கில் களநிலமைகளை நேரில் கண்டறியும் பொருட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளரும் கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை கையாள்வதற்கான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியுமான டாக்டர் அன்வர் ஹம்தான் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் இன்று13/03/2021 காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கள விஜயம் மேற்கொண்டனர்.
மேற்படி விஜயத்திற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாபிழ் நஸீர் அஹமட் மேற்கொண்டிருந்தார்.
டாக்டர் அன்வர் ஹம்தான் தலைமையிலான குழுவினர் தற்போது கொரோனா சிகிச்சை நிலையமாக தொழிற்படும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையத்துடன்
ஆஸ்பத்திரியின் ஏனைய அனைத்து சேவைகளையும் மீள ஆஸ்பத்திரி கட்டடத்தில் இயங்க வைப்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து அறிக்கையாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் கொரோனா தேசிய செயலணிக்கும் சமர்ப்பிக்கவுள்ளனர்.
காத்தான்குடி மக்கள் வைத்திய சிகிச்சைகளை பெறுவதில் எதிர் நோக்கும் பல்வேறு சிக்கல்களை பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் மேதகு ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஸவின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார்.
கள விஜயத்தின் இறுதியில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விஷேட கலந்துரைபாடல் இடம் பெற்றது.
இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாபிழ் நஸீர் அஹமட், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முபீன்,ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஜாபிர்,ஆதார வைத்தியசாலையின் கொரோனா பிரிவு பொறுப்பாளர் டாக்டர் பிரபா,அரச மருத்துவ சங்கத்தின் பிரதிநிதி டாக்டர் சுஹைல்,
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் கொரோனா பிரிவுக்குப் பொறுப்பான விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் அஸ்மி ஹசன்,ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் செயலாளர் டாக்டர் மாஹிர்,அபிவிருத்தி குழுவின் உறுப்பினரும் பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத் தலைவருமான பொறியியல் தெளபீக்,பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ஏறாவூர் நகர தபை உறுப்பினர் சறூஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிழ் நஸீர் அஹமதின் அழைப்பில்சுகாதார சேவைகள் பணிப்பாளர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இன்று விஜயம்
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 13, 2021
Rating:

கருத்துகள் இல்லை: