உதவிப் பணிப்பாளராக ஏ.எம்.தாஜ் நியமனம்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தென்றல் அலைவரிசையின் உதவிப் பணிப்பாளராக சிரேஷ்ட ஒலி/ஒளிபரப்பாளரும் கவிஞரும் சட்டத்தரணியுமான ஏ.எம். தாஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த (27) ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
1995 ஆம் ஆண்டு பகுதி நேர அறிவிப்பாளராக தெரிவு செய்யப்பட்ட ஏ.எம். தாஜ், பின்னர் நிரந்தர அறிவிப்பாளராகி, சிரேஷ்ட அறிவிப்பாளராக பதவி உயர்வு பெற்று, தற்போது உதவிப்பணிப்பாளராக நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
நாட்டில் யுத்தம் நடந்த காலகட்டத்தில் இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய வானொலியான யாழ்ப்பாணம் பலாலி சேவையில் பல வருடங்கள் பணி புரிந்துள்ளார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேத்ரா அலைவரிசையில் 2004 முதல் சமகால அரசியல் நிகழ்ச்சியான 'சதுரங்கம்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அம்பாறை மாவட்டத்தின்; அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டமாணியும் அத்தோடு, சட்டத்தரணியும் ஆவார்.
ஒலிபரப்புத்துறையில் நீண்ட கால அனுபவம் கொண்ட இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் உள்ள அனைத்து தமிழ் சேவைகளிலும் பணியாற்றியுள்ளார்.
அன்பான சுபாவம் கொண்ட இவர், பழகுவதற்கு இனிமையானவர், பண்பானவர், அனைவரையும் மதித்து பேசக்கூடிய சிறந்த மனிதர், ஆர்ப்பாட்டம் இல்லாத கலைஞரும், மண்வாசனையில் அதீத ஈடுபாடு கொண்ட, பேராசையில்லாத எளிய மனிதருமாவார்.
சிறந்த அறிவிப்பாளர், செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், கவிஞர் என பன்முக ஆளுமை கொண்ட ஏ.எம். தாஜ், ஊடகத்தில் ஜாம்பவானாக மிளிந்து சிகரத்தை தொட எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உதவிப் பணிப்பாளராக ஏ.எம்.தாஜ் நியமனம்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 29, 2021
Rating:

கருத்துகள் இல்லை: