தானம் பெற்றுக் கொள்வதற்கு சிரமமாகவுள்ள பின்தங்கிய வணக்கத்தலங்களுக்காக தானம் வழங்குதல்
நாடளாவிய ரீதியில் நிலவும் கொவிட் 19 தொற்று நிலைமை மற்றும் அடிக்கடி விதிக்கப்பட்ட பயணத்தடை காரணமாகவும் அறங்காவலர்களால் தானம் வழங்குவதற்கு சிரமமாகவுள்ள வணக்கஸ்த்தலங்களுக்கு உலர் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சால் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, லங்கா சதொச லிமிட்டட் நிறுவனத்திடம் கொள்வனவு செய்யப்படும் 5000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொதிகளை, குறித்த நிறுவனத்தின் விநியோகப் பிரிவால் அடையாளங் காணப்பட்டுள்ள விகாரைகள் மற்றும் வணக்கத்தலங்களுக்கு விநியோகிப்பதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சராக கௌரவ பிரதமர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தானம் பெற்றுக் கொள்வதற்கு சிரமமாகவுள்ள பின்தங்கிய வணக்கத்தலங்களுக்காக தானம் வழங்குதல்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 30, 2021
Rating:

கருத்துகள் இல்லை: