சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் புதிய நிர்வாக தெரிவு
எம்.எஸ்.எம்.ஸாகிர்
சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் இந்த ஆண்டுக்கான (2021) மறுசீரமைக்கப்பட்ட புதிய நிர்வாகத் தெரிவு மன்றத்தின் பிரதான அலுவலகத்தில் (02) சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்றது.
இந்த நிர்வாகத் தெரிவில் அமைப்பின் தலைவராக கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானா, பொதுச்செயலாளராக நவமணிப் பத்திரிகையின் முன்னாள் ஊடகவியலாளரும் மெட்ரோ லீடர் பத்திரிகையின் செய்தி ஆசிரியருமான எம்.எஸ்.எம்.ஸாகிர், பொருளாளராக எம்.ஐ. றியாஸ் மற்றும் பிரதித் தலைவர்களாக ஏ.எச்.நாஸிக் அஹமத், எம்.எச்.எம். அலி ரஜாய், தவிசாளராக எஸ்.எம். ஸாதிக், உதவிச் செயலாளராக எஸ்.எல். ரஷீட், கணக்காய்வாளராக எம்.ஆதம்பாவா(ஜிப்ரி), தேசிய இணைப்பாளராக ஏ.எல்.எம் அறபாத், மகளிர் செயலாளராக நிரோபா ஜானூன், இளைஞர் செயலாளராக ஏ.ஜே. அன்வர் ஆகியோரும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் புதிய நிர்வாக தெரிவு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 07, 2021
Rating:

கருத்துகள் இல்லை: