இலங்கை இராணுவம் உற்பத்தி செய்துள்ள கிருமித் தொற்று நீக்கும் தன்னியக்க இயந்திரம், ஜனாதிபதிக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது
இலங்கை இராணுவத்தின் ஆராய்ச்சி, பகுப்பாய்வு மற்றும் அபிவிருத்திப் பிரிவு உற்பத்தி செய்துள்ள, இரு கைகளையும் கிருமித் தொற்று நீக்கும் தன்னியக்க இயந்திரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அலுவலகத்தில், இன்று (06) முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த இயந்திரத்தில், நான்கு லீற்றர் திரவத் தொற்று நீக்கியைக் களஞ்சியப்படுத்தி, 600 பேர்களின் இரு கைகளையும் கிருமித் தொற்றுநீக்க முடியும். இது, 48 மணித்தியாலம் தானாகச் செயற்படக்கூடிய இயலுமையைக் கொண்டுள்ளது.
இறக்குமதி செய்வதற்கு நிகராக, குறைந்த செலவில் இந்த இயந்திரத்தை நாட்டில் உற்பத்தி செய்ய முடியும். எனவே, கிடைக்கும் கொள்வனவு கட்டளைக்கு ஏற்ப இயந்திரங்களை உற்பத்தி செய்வதற்கும் இது பற்றிய அறிவை தேவையானவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கும், இராணுவ ஆராய்ச்சிப் பிரிவு தயாராக உள்ளது.
இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் பணிக்குழாம் பிரதானியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கே.பி.ஏகொடவெல மற்றும் பிரகேடியர் சுதத் உதயசேன ஆகியோர், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்
යුද හමුදාවේ පර්යේෂණ, විශ්ලේෂණ හා සංවර්ධන ඒකකය නිෂ්පාදනය කළ දෑත් විෂබීජ හරණය කිරීමේ ස්වයංක්රීය යන්ත්රයක් අද (06) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේ දී ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමා වෙත හඳුන්වා දෙනු ලැබිණ.
විෂබීජ හරණ දියර ලීටර් හතරක ප්රමාණයක් ගබඩා කිරීමෙන් පුද්ගලයන් 600කගේ දෑත් විෂබීජ හරණයටත්, විදුලි ආරෝපණයෙන් පසු පැය හතළිස් අටක් ස්වයංක්රීයව ක්රියාත්මක වීමේ හැකියාවත් යන්ත්රය සතුය.
ආනයනය කිරීමට සාපේක්ෂව අඩු පිරිවැයකින් මෙම යන්ත්රය රට තුළදී නිෂ්පාදනයට හැකියාව පවතී. එම නිසා ලැබෙන ඇණවුම් වෙනුවෙන් යන්ත්ර නිෂ්පාදනයට සහ ඒ පිළිබඳ දැනුම අවශ්ය පාර්ශ්ව වෙත ලබාදීමට යුද හමුදා පර්යේෂණ ඒකකය සූදානම්ව සිටී.
යුද හමුදාපති සහ ආරක්ෂක මාණ්ඩලික ප්රධානී ජෙනරාල් ශවේන්ද්ර සිල්වා, ජනාධිපති අතිරේක ලේකම් මේජර් ජනරාල් (විශ්රාමික) කේ.බී. එගොඩවෙලේ සහ බ්රිගේඩියර් සුදත් උදයසේන යන මහත්වරු මෙම අවස්ථාවට එක්ව සිටියහ.
இலங்கை இராணுவம் உற்பத்தி செய்துள்ள கிருமித் தொற்று நீக்கும் தன்னியக்க இயந்திரம், ஜனாதிபதிக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 07, 2021
Rating:

கருத்துகள் இல்லை: