காத்தான்குடி பிரதேச பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி இன்று இடம்பெற்றது..
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டத்திற்கான சினோபாம் கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.நபீல் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இந்தவகையில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள பாடசாலையில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்கள்,கல்விசாரா ஊழியர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கொவிட்-19 தடுப்பூசிகள் இன்று (10.07.2021 சனிக்கிழமை) ஏற்றப்பட்டுள்ளது.
கோவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் களான ஏ.எம்.எம்.பசீர், எம்.ஐ. ரஹ்மத்துல்லா, ஏனைய பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மற்றும் நகர சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களுக்கான சினோபாம் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
ஊடகவியலாளர்
ந.குகதர்சன்.
காத்தான்குடி பிரதேச பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி இன்று இடம்பெற்றது..
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 10, 2021
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 10, 2021
Rating:





கருத்துகள் இல்லை: