கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பான மின்னஞ்சல் போலியானது : பொது மக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை பாதுகாப்பு செயலாளர்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் பாணியில் கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் போலி மின்னஞ்சல் தொடர்பில் பொது மக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை என்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்ட பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, நாட்டிலுள்ள சகல பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க பிரிவினர்களும் தற்போதுள்ள அமைதியை சீர்குலைக்க எவருக்கும் வழிவகுக்காமல் தத்தமது கடமைகளை திறம்பட முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.
இதேவேளை, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தனிப்பட்ட நலனை எதிர்பார்த்து கைக்குண்டொன்றை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் தற்போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 18, 2021
Rating:

கருத்துகள் இல்லை: