உலகம் முழுவதும் கொரோனா: ஓர் பார்வை .......
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45.32 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இதேவேளை,குணமடைந்தோர் எண்ணிக்கை 19 கோடியே 53 இலட்சத்து 65ஆயிரத்து 126 ஆக அதிகரிதத்துள்ளது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 45,33,609 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 21,85,40,994 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 19,53,65,126 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,06,153 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 220 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா: ஓர் பார்வை .......
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 02, 2021
Rating:

கருத்துகள் இல்லை: