அன்புடன் உளவளத்துணை" நூல் வெளியீடு..

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆசிரியரு வள நிலையத்தின் பிரதான முகாமையாளரும் விரிவுரையாளருமான ஏ. ரியாஸ் (SLTES)
அவர்களினால் எழுதப்பட்ட அன்புடன் உளவளத்துணை எனும் பெறுமதிமிக்க நூல் வெளியீட்டு நிகழ்வு 2021.11.21 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பிஸ்மி வளாகத்தில் (அல்-மனார்) இடம்பெற்றது.
மேற்படி வெளியீட்டு நிகழ்வில் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள், பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அன்புடன் உளவத்துணை என்னும் நூலானது தற்கால சமூகநிலையை மையமாக கொண்டு உளவளத்துணை [Counseling] பற்றிய தெளிவான விளக்கத்தினை தருவதோடு வாழ்வியலின் யதார்தத்தையும் விவரிக்கும் ஒரு நூலாகவும் அமையப்பெற்றுள்ளது.
இது கல்விப்புலத்தில் இருக்க வேண்டிய ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய நூலாகும்.
(எம்.பஹ்த் ஜுனைட்)
அன்புடன் உளவளத்துணை" நூல் வெளியீடு..
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 24, 2021
Rating:

கருத்துகள் இல்லை: