இலங்கையில், எதிர்வரும் 30ம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு
பிம்ஸ்ரெக்ஸ் அமைப்பின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 30ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இம்முறை இந்த அமைப்பின் தலைமைத்துவம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் வரவுள்ளார். அடுத்த தலைமைத்துவம் அவருக்கு வழங்கப்படவுள்ளது.
ஏனைய நாடுகளின் தலைவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். எதிர்வரும் 29ம் திகதி 7 உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்.
இலங்கையில், எதிர்வரும் 30ம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 22, 2022
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 22, 2022
Rating:

கருத்துகள் இல்லை: