Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

4 கோரிக்கைகளுக்கு அரசு பச்சைக்கொடி! கூட்டமைப்பு மகிழ்ச்சி

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கும், வடக்கு, கிழக்கில் இராணுவ தேவைக்காக இனியும் காணிகளை கையகப்படுத்தாமல் இருப்பதற்கும் அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுப்பதற்கும், வடக்கு, கிழக்கின் பொருளாதார மீள் எழுச்சிக்காக விசேட நிதியமொன்றை அமைப்பதற்கும் அரச தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25.03.2022) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, நிபுணர்கள் குழுவினர் அறிக்கை வெளிவந்த பின்னர் அரசியல் தீர்வு பற்றி கலந்துரையாடுவதற்கும், அடுத்த சுற்று பேச்சுக்கு முன்னர் முக்கிய நான்கு விடயங்களை செயற்படுத்துவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இந்த தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கும், வடக்கு, கிழக்கில் இராணுவ தேவைக்காக இனியும் காணிகளை கையகப்படுத்தாமல் இருப்பதற்கும் அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுப்பதற்கும், வடக்கு, கிழக்கின் பொருளாதார மீள் எழுச்சிக்காக விசேட நிதியமொன்றை அமைப்பதற்கும் அரச தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25.03.2022) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, நிபுணர்கள் குழுவினர் அறிக்கை வெளிவந்த பின்னர் அரசியல் தீர்வு பற்றி கலந்துரையாடுவதற்கும், அடுத்த சுற்று பேச்சுக்கு முன்னர் முக்கிய நான்கு விடயங்களை செயற்படுத்துவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இந்த தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

நிபுணர்கள் குழுவினர் அறிக்கை வந்த பிறகு அரசியல் தீர்வு பற்றி பேச்சுகள் ஆரம்பமாகும்.

அரச தரப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சர்களான சமல் ராஜபக்ச, ஜி.எல். பீரிஸ், அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டமைப்பின் சார்பில் ரெலோ எம்.பிக்களைத்தவிர ஏனையோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஆர்.சனத்

4 கோரிக்கைகளுக்கு அரசு பச்சைக்கொடி! கூட்டமைப்பு மகிழ்ச்சி Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 25, 2022 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.