முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு: ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதம அதிதி
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் இருபத்தைந்தாவது வருடாந்த மாநாடு இன்று (12) சனிக்கிழமை கொழும்பு அல் - ஹிதாயா மகாவித்தியாலய பஹார்தீன் கேட்போர் கூடத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இரு அமர்வுகளாக நடைபெறும் இந்த மாநாட்டில், முதல் அமர்வில் பிரதம அதிதியாக ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கலந்து கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்திய லோக்சபா பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பிப்பதோடு, கலாநிதி எம்.சி. ரஸ்மின், 'முஸ்லிம்களும் ஊடக எதிர்காலமும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
இரண்டாவது அமர்வில் வருடாந்தப் பொதுக்கூட்டம் நடைபெறும். புதிய உத்தியோகத்தர்கள் தெரிவும் மற்றும் யாப்புத்திருத்தம் பற்றிய செயற்குழு பிரேணையும் இதன்போது ஆராயப்படும்.
சுகாதார வழிமுறைகளை முழுமையாகப் பேணி இம்மாநாடு நடாத்தப்படவிருப்பதால் அங்கத்தவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இம்மாநாடு நடைபெறவிருப்பதாக போரத்தின் செயலாளர் என்.ஏ.எம்.ஸாதிக் சிஹான் தெரிவித்தார்.
முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு: ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதம அதிதி
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 12, 2022
Rating:
கருத்துகள் இல்லை: