காத்தான்குடி கோட்ட கல்விப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி.....
புலமைப்பரிசி்ல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
2021/2022 புலமைப் பரிசி்ல் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த, சித்திபெறாத அனைத்து மாணவர்களுக்கும் அதற்காக பாடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் பரீட்சை என்றால் மாணவர்கள் பரீட்சையில் சித்தி பெறுவதும், சித்தி பெறாது விடுவதும் வழமை. இதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. அதேவேளை மாணவர்கள் தரம் ஆறாம் ஆண்டிலிருந்தே தங்களது கல்வியினை சிறப்பாக மேற்கொள்கின்ற போதுதான் உங்கள் உண்மையான இலக்கை அடைந்து கொள்ள முடியும் என காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன் தனது வாழ்த்துச் செய்தியினை லங்கன்வொய்ஸ் மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை: