புகையிரத கட்டண அதிகரிப்பு இடைநிறுத்தம்
நேற்று முன்தினம் (23) அதிகரிக்கப்பட்ட புகையிரத முன்பதிவு ஆசனக் கட்டணம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மலையகம் மற்றும் வடமாகாணத்திற்கான நகரங்களுக்கிடையிலான மற்றும் விசேட புகையிரத சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருந்தன.
இந்த கட்டண அதிகரிப்பு இரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டிய புகையித நிலைய அதிபர்கள் சங்கம், வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரித்தது, கட்டண அதிகரிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதைடுத்து, குறித்த கட்டண அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
புகையிரத கட்டண அதிகரிப்பு இடைநிறுத்தம்
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 25, 2022
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 25, 2022
Rating:

கருத்துகள் இல்லை: