போரில் காயமடைந்த படையினரை சந்தித்து ஆறுதல்கூறி செல்பிஎடுத்து உற்சாகப்படுத்தினார் உக்ரைன் ஜனாதிபதி
போரில் காயமடைந்த படையினரை சந்தித்து ஆறுதல்கூறி செல்பி எடுத்து உற்சாகப்படுத்தியதுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் வீரர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இருதரப்பிலும் பல வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வீரர்கள் காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் வீரர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் வீரர்கள் செய்த சேவைகளை பாராட்டி பதக்கங்களை வழங்கினார். வீரர்களிடம் பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி நீங்கள் விரைவாக குணம் அடைவீர்கள் என்றும் தெரிவித்தார்.
உங்களது குணமடைவு எங்களது பொதுவான வெற்றிக்கான சிறந்த பரிசாகும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் காயம் அடைந்த வீரர்களுடன் செல்பி எடுத்து உற்சாகப்படுத்தினார்.
கருத்துகள் இல்லை: