‘நல்லாட்சியில் இப்படி நடக்கவில்லை’ – மைத்திரி ஆதங்கம்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை கட்டாயம் பெற வேண்டும் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
‘நல்லாட்சியில் இப்படி நடக்கவில்லை மைத்திரி ஆதங்கம் இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
”நாட்டு மக்கள் தற்போது கடும் நெருக்கடியில் உள்ளனர். அரசுமீது கடும் எதிர்ப்பை வெளியிடவும் ஆரம்பித்துள்ளனர். இந்நிலைமை நீடித்தால் மக்கள் போராட்டத்தில் இறங்குவார்கள். எனவே, இப் பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற வேண்டும்.
எனது ஆட்சில் இப்படி நடக்கவில்லை. மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். வீதி அமைக்கும் பணிகளை இந்த அரசு உடன் நிறுத்த வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.” – என்றார்.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 21, 2022
Rating:

கருத்துகள் இல்லை: