காத்தான்குடி ஹிதாயா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு
காத்தான்குடி ஹிதாயா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அனுசரணையுடன் எதிர்வரும் (2022.03.20) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் பி.ப. 2.00 மணிவரை பள்ளிவாயலில் இரத்தான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று சத்திர சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இரத்தத்திற்கான தேவை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதனையிட்டு இம்மாபெரும் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏட்பாட்டாளர்கள் தெரிவித்தனா்
எனவே, இவ்விடயத்தை கருத்திற்கொண்டு மனித நேயத்தை கட்டிக் காக்கக்கூடிய இந் நிகழ்வில் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
குறிப்பு: பெண்களுக்கு பிரத்தியேகமான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
”ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார்'(அல்மாயிதா-32)”
- நிர்வாகம்
- மஸ்ஜிதுல் ஹிதாயா
- காத்தான்குடி
கருத்துகள் இல்லை: