எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்புகிறதாம்!
போதுமானளவு எரிவாயு இருப்பு இன்மையால், எரிவாயு விநியோகம் தற்காலிகமாக இடை நிறுத்தப்படுவதாக லாஃப் மற்றும் லிட்ரோ ஆகிய நிறுவனங்கள் நேற்று அறிவித்திருந்தன.
எவ்வாறாயினும், தொடர்ந்து எரிவாயுவை இறக்குமதி செய்வதில் தொடர்ந்தும் டொலர் நெருக்கடி நீடிப்பதாக தெரியவருகிறது.
இருந்தாலும், தற்போது இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மூலம் தற்போதுள்ள நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுவாக இலங்கையின் செலவுகளைச் சமாளிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையென்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றில் எரிபொருள் இறக்குமதி, மூலப்பொருள் இறக்குமதி, ஏனைய பொருட்கள் உள்ளிட்ட செலவுகள் அடங்கும். எனினும், தற்போது ஏராளமான பொருட்களுக்கு தடையும், கட்டுப்பாடுகளும் இருக்கும் நிலையில், இந்த செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய தற்போது இந்தியாவிடமிருந்து கிடைத்துள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் அடுத்த ஒரு மாத காலத்திற்கு சமாளிக்கக்கூடியதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை: