இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட இரகசிய உடன்படிக்கைகள் என்ன பகிரங்கப்படுத்தவேண்டும்- எல்லே குணவன்ச தேரர்
இந்தியாவுடன் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பில் கைச்சாத்திடப்படவுள்ள மூன்று உடன்படிக்கைகள் குறித்த விபரங்களை ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கும் பொதுமக்களிற்கும் பகிரங்கப்படுத்தவேண்டும் என எல்லே குணவன்ச தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
கடல்சார் பாதுகாப்பு குறித்த ஒத்துழைப்பினை அதிகரிக்கும் விதத்தில் இலங்கையும் இந்தியாவும் மூன்று உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளன என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு மில்லியன் டொலர் கடன் பெறுவதற்காக இந்தியாவுடன் கைச்சாத்திட்ட உடன்படிக்கையில் இடம்பெற்றுள்ள விபரங்களை அரசாங்கம் இன்னமும் பகிரங்கப்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் அவசர சுதந்திரவர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடக்குகிழக்கு உட்பட நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள தேசிய வளங்கள் சுரண்டப்படுவது மற்றும் பணத்திற்காக விற்கப்படுவதை நான் கடுமையாக எதிர்ப்பேன் எனஅவர் தெரிவித்துள்ளார்
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 22, 2022
Rating:

கருத்துகள் இல்லை: