ஜனாதிபதி பதவி விலகியதும் எமது திட்டம் அறிவிக்கப்படும் – அநுரகுமார திஸாநாயக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
”நாட்டு மக்கள் கொந்தளித்துள்ள நிலையில், அதனை சமாளிப்பதற்காக இராஜினாமா என்ற நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. இது மக்களுக்கும் தெரியும்.
கோட்டா அரசால் முன்வைக்கப்படும் இடைக்கால அரசு, இடைக்கால சர்வக்கட்சி அரசு என்பவற்றை ஏற்பதற்கு எமது கட்சி தயார் இல்லை. கோட்டாபய ராஜபகசவும், அரசும் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. அதனை இந்த அரசு செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்த பின்னர் அடுத்தக்கட்டம் பற்றி தீர்மானம் எடுக்கலாம். அதற்கான உரிய திட்டம் எம்மிடம் உள்ளது.” – என்றார்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 05, 2022
Rating:

கருத்துகள் இல்லை: