Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தனுஷ்க குணதிலக்கவின் விசாரணை ஒத்திவைப்பு அவுஸ்திரேலிய நீதிமன்றம் அறிவிப்பு

 


இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் அவருக்கு எதிரான வழக்கின் விசாரணையை 2023 பெப்ரவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ள அவுஸ்திரேலிய நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


போலிஸார் தங்களின் சாட்சியங்களை இறுதி செய்யகூடிய வகையில் இந்த உத்தரவு பிறபிக்கப்படது.


31 வயதான தனுஷ்க, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தார். இதன் போது டேட்டிங் செயலியான டிண்டரில் சந்தித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


சிட்னி டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றில், நீதவான் டேவிட் பிரைஸ், இந்த வழக்கை பெப்ரவரி 23-ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

தனுஷ்க பெப்ரவரியில் நீதிமன்றில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


எனினும் அவருக்கான கடுமையான நிபந்தனைகள் மற்றும் இரவு நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு என்பன தொடர்கின்றன.  அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பெண்ணை தொடர்பு கொள்ள அனுமதியில்லை.


தனுஷ்க குணதிலக்கவின் விசாரணை ஒத்திவைப்பு அவுஸ்திரேலிய நீதிமன்றம் அறிவிப்பு Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 12, 2023 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.