ஜனாதிபதி செயலக இணைப்பாளர் மற்றும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் ஆகியோரிக்கிடையிலான விஷேட சந்திப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக ஜனாதிபதி செயலக இணைப்பாளருக்கும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி ஆகியோர்களுக் கிடையிலான சந்திப்பு (18.9.2023 திங்கள்) ஜனாதிபதி செயலகத்தில் நடை பெற்றது.
இதன் போது கடந்த அனைத்து ஜனாதிபதித் தேர்தலிலும் எமது கட்சி ஆதரித்த ஜனாதிபதிளே பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளார்கள்.
ஆனாலும் அந்த வெற்றியின் பலன் கட்சிக்கு கிடைக்கவில்லை.
ஆகவே எமது கோரிக்கைகள் சிலவற்றையாவது உடனடியாக நடை முறைப்படுத்தினால் மட்டுமே இதுபற்றி பின்னர் கட்சி முடிவெடுக்கும் என
ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதற்காக ஐக்கிய காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கைகளில் பிரதானமானவைகள்:
1) நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
2) எமது கட்சியின் அநுராதபுர மாவட்ட இணைப்பாளரின் கோரிக்கையான கலாவெவ ரயில்வேயில் புக்கிங் சேவையை உடனடியாக ஆரம்பித்தல்.
3) கல்முனை உள்ளூராட்சி சபையை மூன்று சபைகளாக பிரித்தல்.
1. கல்முனை மாநகர சபை.
2. சாய்ந்தமருது நகர சபை.
3.மருதமுனை, பாண்டிருப்பு பிரதேச சபை.
4) மௌலவி ஆசிரிய நியமனத்துக்காக வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடல்.
5) இது சம்பந்தமன அனைத்து செயல்பாடுகளிலும் தலையிட கட்சிக்கு அனுமதித்தல்.
மேலே சொன்னவற்றை நிறைவேற்ற இப்போதே ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை எடுத்தால் முஸ்லிம் மக்களிடம் மிக இலகுவாக எமது தேர்தல் பிரச்சாரத்தை முன் கொண்டு செல்ல முடியும் எனவும் இதன் போது
ஐக்கிய காங்கிரஸ் கட்சி யின் தலைவரினால் விடயங்கள் முன்வைப்பட்டன.
இக்கோரிக்கைகள் யாவும் எமது மக்கள் சார்ந்த விடயங்கள் என கட்சியின் உயர்பீட உறுப்பினர் தெரிவித்தார்.
(கட்சியின் ஊடகப் பிரிவு)
ஜனாதிபதி செயலக இணைப்பாளர் மற்றும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் ஆகியோரிக்கிடையிலான விஷேட சந்திப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 20, 2023
Rating:

கருத்துகள் இல்லை: