காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களின் அறிவுத்திறன் பாடசாலைக்கு மேலும் பெருமை சேர்க்கின்றது.
SCIENTIA வினாடி வினா போட்டியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போட்டி இன்று (19.09.2023) கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமு லை வளாகத்தில் நடை பெற்றது.
27 பாடசாலைகள் கலந்து கொண்ட மேற்படி போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டதுடன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், பாடசாலை சமூகதித்திற்கும் பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களின் அறிவுத்திறன் பாடசாலைக்கு மேலும் பெருமை சேர்க்கின்றது.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 19, 2023
Rating:

கருத்துகள் இல்லை: