பாடசாலையில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாதணிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் புத்தக பை வழங்கும் வைபவம்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.செ.தி.பெருமாள்
ஹட்டன் கல்வி வலயம் கோட்டம் மூன்றில் உள்ள மஸ்கெலியாஈ, சமனெலிய, சிங்கல மஹா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 320 மாணவ மாணவிகளுக்கு இன்று காலை வித்தியாலய அதிபர் யு.ஜு.அருனசாந்தகுமார தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் மத்திய மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மேனகஹேரத்,எஸ்,ஓ,எஸ்,நிறுவன தலைவர் திரு.முரளீதரன்குமார், ஹட்டன் வலய பணிப்பாளர் நிஹால் அலககோன், மற்றும் முன்னாள் அதிபர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தரம் ஒன்று முதல் ஐந்து வரை கல்வி பயிலும் 121 மாணவர்களுக்கு 3500/பெருமதி வாய்ந்த பாதனியுடன் புத்தக பை மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்க பட்டது மேலும் தரம் ஆறு முதல் பதிமூன்று வரை கல்வி பயிலும் 199 மாணவ மாணவிகளுக்கு 4500 ரூபாய் பெறுமதியான பாதனி மற்றும் புத்தக பை பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த ஏற்பாடுகளை பாடசாலை அபிவிருத்திச் சங்கம் செயலாளர் திரு சமன் சந்திரசிறி மேற் கொண்டு எஸ், ஓ, எஸ் நிறுவன தலைவர் திரு.முரளீதரன் குமார் வழங்கி உள்ளார்.
பாடசாலையில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாதணிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் புத்தக பை வழங்கும் வைபவம்.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 19, 2023
Rating:

கருத்துகள் இல்லை: