Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம் மற்றும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் இணைந்து சிறுகதைகள்' வெளியீட்டு விழா

இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம் மற்றும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் ஆகியiவை இணைந்து வெளியீடும்' அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள்' வெளியீட்டு விழா. எதிர்வரும் 23.09.2023 சனிக்கிழமை மாலை 4 மணிக்குப் பேராசிரியர் சபா. ஜெயராசா தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன். பிரமுகர்களின் மங்கல விளக்கேற்றலுடன், செல்வி பிரியன்கா ஆன் பரான்சிஸ் தமிழ் வாழ்த்து பாடி ஆரம்பித்து வைப்பார்.

இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம் மற்றும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் ஆகியவற்றின் இணைப்பாளர் திருமிகு த. சிவசுப்பிரமணியம் (தம்புசிவா) வரவேற்புரையையும், தொடக்கவுரையம் நிகழ்த்துவார்.

வாழ்த்துரைகளை ஞானம் கலை இலக்கிய சஞ்சிகயின் பிரதம் ஆசிரியர் மருத்துவர் திருமிகு தி. ஞானசேகரன் மற்றும் கல்வி அமைச்சின் மேனாள் மேலதிக செயலாளர் திருமிகு உடுவை.எஸ்.தில்லநடராஜா ஆகியோர் வழங்குவார்கள்.

இந்நிகழ்வில் ஊடக அதிதிகளாகத் தினகரன் பிரதம ஆசிரியர் திருமிகு தே.செந்தில்வேலவர், வீரகேசரி பிரதமஆசிரியர் திருமிகு எஸ்.ஸ்ரீகஜன், தமிழன் பிரதம ஆசிரியர் திருமிகு இரா. சிவராஜா வீரகேசரி நிறுவன பிரதம செய்தி முகாமையாளர் திருமிகு ஆர். பிரபாகன் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் திருமதி உமா சந்திரா பிரகாஷ; அவரகளும் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.

நூல் விமரசனத்தை எழுத்தாளாரும், 'தகவம்'செயலாளரும் மான திருமதி வசந்தி தயாபரன் முன் வைப்பார்கள்.

முதற் பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்ள சிறப்புப் பிரதிகளைத் தொழில் தொழில் அதிபர்களான் திருமதி சண்முகப்பிரியா கார்த்திக், திருமிகு ராஜ்பிரசாத் விஸ்வாநதன் (துரைவி) திருமதி கௌசல்யா கோவிந்தப்பிள்ளை ஆகியோருடன் பலர் சிறப்பு பிரதிகளைப் பெற்றுச் சிறப்பு செய்வார்கள்.

ஏற்புரையை நூலாசிரியர் திருமதி அன்னவட்சுமி இராஜதுரை அவர்கள் நிகழ்த்த, நன்றியுரையை இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம் மற்றும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகத்தி;ன ஊடக இணைப்பாளர் கலாபூஸணம் கே.பொன்னுத்துரை நிகழ்த்துவார்.

நிகழ்வுகளை மேமன்கவி தொகுத்து வழ்ங்குவார்



இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம் மற்றும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் இணைந்து சிறுகதைகள்' வெளியீட்டு விழா Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 19, 2023 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.