Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலயத்திற்கு 20 லட்சம் பெறுமதியான தொடர்பாடல் உபகரணத் தொகுதிகள் வழங்கிவைப்பு.



காத்தான்குடி மட்/ மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு  கல்வி அமைச்சின் ஊடாக  தேசிய கல்வி நிறுவனத்தினால் சுமார் 20 லட்சம் பெறுமதியான தொடர்பாடல் உபகரணத் தொகுதிகள் வழங்கிவைப்பு.


தரம்-8-11ஆம் தரங்களுக்கான மாணவர்களின் எண்ம குடியுரிமைத் திறன்களை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  8 -11ஆம் தரங்களில் கற்கும் மாணவர்களுக்கான எண்ம திறன்களை விருத்தி செய்வதற்கான யுனிசெப் உதவியுடன் மேற்கொள்ளும் செயற்றிட்டத்தினை  மட் / மீரா பாலிகா தேசிய பாடசாலையில் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.


இத் தொடர்பாடல் உபகரணத் தொகுதியின் தேவைப்பாடு குறித்து இவ் வித்தியாலயத்தின் அதிபர். அஷ் ஷெய்க் UL மன்சூர் அவர்களினால் அன்மையில் கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடப்பட்டிருந்தது. 


இதற்கமைய இத் தொடர்பாடல் உபகரணத் தொகுதியினை கையளிக்கும் நிகழ்வு மகரகமவில் அமைந்துள்ள  தேசிய கல்வி நிறுவனத்தில் 15.03.2024ம் திகதி வெள்ளிக்கிழை இடம்பெற்ற தேசிய நிகழ்வில் வைத்து இப் பாடசாலையின் உதவி அதிபரும்  தொடர்பாடல் ஊடகக் கற்கை பொறுப் பாசிரியருமான  திரு.ஏ.பி.எம். ஜலால்தீன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.



காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலயத்திற்கு 20 லட்சம் பெறுமதியான தொடர்பாடல் உபகரணத் தொகுதிகள் வழங்கிவைப்பு. Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 17, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.