Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஹாபிஸ் நஸீர் அஹமத் அவர்களின் முயற்சியினால் காத்தான்குடியின் வீதி அபிவிருத்தியில் ஓர் புரட்சி.

சுமார் 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 8.25 கிலோமீட்டர் நீளமான வீதிகள் காப்பட் வீதிகளாக காத்தான்குடி பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.

இந்த வேலைத்திட்டம் தொடர்பில் முன்னாள் கௌரவ அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் அவர்களின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது


உலக வங்கியின் நிதி அளிப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் ICDP (உள்ளக இணைப்பு அபிவிருத்தி) திட்டத்தின் கீழ் காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை மஞ்சந் தொடுவாய் பாலமுனை ஆகிய பிரதேசங்களில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தி செய்யப்படாது புறக்கணிக்கப்பட்டிருந்த பல மிக முக்கிய வீதிகள் காப்பட் வீதிகளாக அபிவிருத்தி செய்யும் முன்னாயத்த பணிகள் யாவும் அழ்ழாஹ்வின் நாட்டத்தினால் நிறைவுற்று தற்போது கொழும்பு ICDP திட்ட அலுவலகத்தினால் தேசிய மட்ட கேள்வி கோரப்பட்டுள்ளது எதிர்வரும் 2024.03.18 திகதியை தொடர்ந்து தெரிவு செய்யப்படும் ஒப்பந்ததாரருக்கு வேலைகள் வழங்கப்படும்.


எமது வேண்டுகோளின் பேரிலும் முன்னாள் கௌரவ அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமத் அவர்களின் தனிப்பட்ட ரீதியான காத்தான்குடி பிரதேச மக்கள் மீது கொண்டிருக்கும் பற்றின் காரணமாகவும் உலக வங்கியின் இவ்வீதி அபிவிருத்தி திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டிய வீதிகளின் விபரங்கள் கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் கௌரவ அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.


இதற்கு அமைவாக கடந்த 2023.02.21ஆம் திகதி ICDP  திட்டம் மற்றும் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றின் பொறியியலாளர்களுடன்  முன்னாள் அமைச்சர் அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் எம்.சரூஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் முதல் கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொன்டிருந்தனர் இது தொடர்பான எமது செய்தி அன்றைய தினமே வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் முன்மொழியப்பட்ட வீதிகளில் இரு வீதிகளை தவிர மற்ற அனைத்து விதிகளும் அபிவிருத்தி செய்ய தெரிவு செய்யப்பட்டிருந்தது.


இதன் அடுத்த கட்டமாக கடந்த 2023.03.09 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட வீதிகளுக்கான செலவு மதிப்பீட்டறிக்கை தயாரிப்பதற்காக மட்டக்களப்பு RDA பொறியியலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் இணைப்பாளர் ஆகியோரை கொண்ட குழுவினர் வருகை தந்திருந்தனர். இப்பணியில் அல் பறகத் மீனவர் அமைப்பின் செயலாளர் MY.ஆதம் லெவ்வை தலைவர் SHA.அஸிஸ் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தாஹிர் பாலமுனை சனச சமூகநிலைய தலைவர் பவுசர் பாலமுனை கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ஜாபீர் ஆகியோரும் ஒத்துழைப்புகளை வழங்கி இருந்தனர். இது தொடர்பான செய்தியும் 2023.07.10 திகதி வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தது


தற்போது இவ்வீதிகள் அபிவிருத்தி செய்வதற்கான சகல முன்னாயத்த செயற்பாடுகளும்  வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இன்ஷா அழ்ழாஹ் ஏப்ரல், மே மாதத்தில் வீதிகளின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதமளவில் நிறைவுறும்.

இவ்வீதிகளை மிகுந்த கஷ்டத்துடன் தினமும் பயன்படுத்தும் பல்லாயிரக்கணக்கான மக்களது மிக நீண்ட கால தேவையும் காத்தான்குடியின் இரு முனைகளான பூநொச்சிமுனை மற்றும் பாலமுனையினையும் இலகுவான போக்குவரத்தூடாக இணைக்கும் பெரும் சமூகப்பணியினையும் நிறைவு செய்து தரும் முன்னாள் கௌரவ அமச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களுக்கு இப்பிரதேச மக்கள் நன்றி கடன் பட்டவர்களாகும். தனது சொந்த ஊரை விட எமது ஊருக்கு அவர்கள் இவ்வீதி அபிவிருத்தி திட்டத்தில் பெரும் முன்னுரிமை கொடுத்துள்ளது எந்த ஒரு அரசியல்வாதியும் செய்யாத பணியாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்(தனக்கு கிடைத்த 20Km இல் 8.25Km நீளத்தை தந்துள்ளார்)


இவ்வீதிகளை ICDP திட்டத்தின் மூலம் அபிவிருத்தி செய்வதற்காக முன்னாள் அமைச்சர் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையை தடுப்பதற்கு அல்லது போலியாக தமது பெயரை பின் கதவால் இடுவதற்கும் அரசியல் பிரமுகர்கள் செயற்பட்டார்கள் எனும் உண்மையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும். 

அபிவிருத்தி செய்யப்பட உள்ள வீதிகளில் விபரம் 1. டீன்வீதி. இவ்வீதியானது ஏற்கனவே இவர்களாலேயே கோட்ட ஆட்சியில் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தினூடாக அபிவிருத்தி செய்யப்பட்டு நாட்டின் நிதி நிலமையினால் இடையில் நிறுத்தப்பட்டதாகும். (2.1Km  உத்தேச மதிப்பீடு 17கோடி 80இலட்சம்)  பிரதான வீதியில் தொடங்கி கடற்கரையை அடைந்து கடலோர வீதியூடாக சென்று கடற்கரை கொன்கிரீட் வீதியில் முடிவுறும்


2. பாலமுனை கர்பலா காத்தான்குடி இணைப்பு வீதி (2.2Km உத்தேச  மதிப்பீடு 13கோடி 80இலட்சம்)தீன் வீதி அலியார் சந்தையில் தொடங்கி பாலமுனை பிரதான வீதி சந்தியை அடையும்.

3. அல் அக்ஸா( புதிய காத்தான்குடி பெரய ஜீம்ஆ பள்ளிவாயல் வீதி) (2.75 Km உத்தேச மதிப்பீடு13கோடி 20இலட்சம்) அல் அக்ஸா பள்ளிவாயலில் தொடங்கி பதுரியா வீதியூடாக சென்று முதியோர் இல்ல வீதியை அடைந்து அங்கிருந்து மஞ்சந் தொடுவாய் புதிய பாலமுனை வீதியூடாக  பூநொச்சிமுயை அடைந்து அங்கிருந்து பூநொச்சிமுனை சுனாமி (பச்சை வீடு) வீட்டு திட்ட வீதியில் நிறைவுறும்

4. CTB வீதி மற்றும் பெண் சந்தை வீதி (1.1Km உத்தேச  மதிப்பீடு 5கோடி 10இலட்சம்)பெண் சந்தை வீதி, இரண்டாம் குறுக்கு வீதி, சிடிபி டிப்போ பின்னால் செல்லும் மையவாடி வீதி என்பன உள்ளடங்கும்

இவ்வீதி அபிவிருத்தியின் மூலம் காத்தநகர் பிரதேசத்தின் சமூக பொருளாதார துறைகளிலும் மேம்பாடு ஏற்படும். அல்ஹம்துலிழ்ழாஹ்

MY.ஆதம்லெவ்வை செயலாளர்.
அல் பறகத் மீனவர் அமப்பு.
ஹாபிஸ் நஸீர் அஹமத் அவர்களின் முயற்சியினால் காத்தான்குடியின் வீதி அபிவிருத்தியில் ஓர் புரட்சி. Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 02, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.