காத்தான்குடி சபீலூர் ரசாத் கல்லூரியின் ஹத்முல் புகாரி மற்றும் பட்டமளிப்பு விழா...
ஏ.எல்.டீன் பைரூஸ்
காத்தான்குடி சபீலுர் ரசாத் இஸ்லாமிய மார்க்கக் கல்லூரியின் ஹத்முல் புகாரி மற்றும் பட்டமளிப்பு விழா கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க்-அல்ஹாபிழ் AM.ரியாஸ் (பலாஹி) தலைமையில் இடம் பெற்றன.
நிகழ்வின் பிரதம பேச்சாளராக பாணந்துரை இப்னு உமர் உயர் கற்கை கலாபீடத்தின் உப-அதிபர் அஷ்ஷெய்க் அல்-முப்தி MFM.ரியாஸ் (ரஷாதி,ஹுஸைனி) நிகழ்த்தினார்.
அதே போன்று ஹத்முல் புகாரியினை காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவரும், காத்தான்குடி சபீலூர் ரசாத் இஸ்லாமிய மார்க்கக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் AM.ஹாரூன் (ரஷாதி) நிகழ்த்தினார்.
20013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி மதரசாவின் 13 வது பட்டமாளிப்பு விழாவின் போது 7 மாணவர்கள் ஹாபிழ் மற்றும் மௌலவி பட்டம் பெற்று வெளியாகினர்.
அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் AM.முப்தி அவர்களின் நேரிப்படுத்தளுடன் விழா இடம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பட்டம் பெற்ற மாணவர்களின் விபரம்.
1)அஷ்ஷெய்க்/அல்ஹாபிழ் S.சஜாத் (ரஷாதி) காத்தான்குடி.
2)அஷ்ஷெய்க்/. MM. அப்துல்லா(ரஷாதி) பாலமுனை.
3)அஷ்ஷெய்க்/அல்ஹாபிழ் KM.நிஜாத்-(ரஷாதி) பாலமுனை.
4)அஷ்ஷெய்க்/அல்ஹாபிழ்MR.அப்துர்றஹ்மான்-(ரஷாதி) காத்தான்குடி.
5)அஷ்ஷெய்க்/ SH. அனஸ்(ரஷாதி) காத்தான்குடி.
6)அஷ்ஷெய்க்/அல்ஹாபிழ் MIM.சாதிர்-(ரஷாதி) பாலமுனை.
7)அஷ்ஷெய்க்/அல்ஹாபிழ் A.சபான்-(ரஷாதி) ஒலுவில்
நிகழ்வுகள் யாவும் அஷ்ஷெய்க்/அல்ஹாபிழ் முகம்மது றிஸ்வி-(புர்கானி முப்தியின் நெறிப்படுத்தலில் இடம் பெற்றதுடன் காத்தான்குடியின் மூத்த உலமாக்கள், மதரசா நிரு வாகிகள் பொற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்படத்தக்கது.
காத்தான்குடி சபீலூர் ரசாத் கல்லூரியின் ஹத்முல் புகாரி மற்றும் பட்டமளிப்பு விழா...
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 06, 2024
Rating:

கருத்துகள் இல்லை: