Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி மொனாஸ் ஆங்கில அகடமியின் வருடாந்த விழா..!

(B.M.பயாஸ்)

காத்தான்குடியில் ஆங்கில கல்வித்துறையின் முன்னோடியாக திகழும் மொனாஸ் ஆங்கில அகடமியின் வருடாந்த விழா அதன் அதிபர் திருமதி. ஹில்மியா முபீன் தலைமையில்  மிக விமர்சையாக இடம்பெற்றது. 


இதனடிப்படையில் Humanity மனித நேயம் என்ற தொனிப் பொருளில் கலை  கலாசார நிகழ்ச்சிகள் யாவும் மாணவர்களினால் இடம்பெற்றன. குறித்த நிகழ்வில்;
 பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் தலைவர் கலாநிதி M.I.பெளசுல் கரீமா கலந்து சிறப்பித்தார். 


இவ் அகடமியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

அத்துடன் தரமான ஆங்கில மொழிக் கல்வியினை பிள்ளைகளுக்கு வழங்குவதன் மூலம் இன்றைய உலகை அறிந்து வெல்லக் கூடிய மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தில் அதிபர்  உரையாற்றினார்


முற்று முழுதாக ஆங்கில மொழியில் இடம்பெற்ற இந்நிகழ்வில், காத்தான்குடி கல்விப்பணிப்பாளர் AGM.ஹக்கிம் (SLEAS),
காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.MSM.ஜாபிர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் அகடமியின் ஆலோசகருமான ACA.அஸீஸ், இரு மொழிஆசிரியரும் மொனாஸ் அகடமியின் ஆலோசகருமான SM.சன்சீர், ஓய்வு பெற்ற அதிபர் MCMA.சத்தார், காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர் MA.நிஹால் அஹமட் (BSC), காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தின் அதிபர் SM.முஜீப்,அன்வர் வித்தியாலயத்தின் அதிபர் SM.அனீஸ்,மற்றும் ஹிழ்ரியா வித்தியாளயத்தின் அதிபர் MY.யஸீ்ர் அரபாத் அதனுடன் பொது மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி மொனாஸ் ஆங்கில அகடமியின் வருடாந்த விழா..! Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 03, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.