மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!!
மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி (15.03.2024) திகதி மாலை 2.30 மணியளவில் இடம்பெற்றது.
இப்போட்டியானது மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி நிமலினி பேரின்பராஜா தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதிக்கல்வி பணிப்பாளர் (நிர்வாகம்) திருமதி.எஸ். ரவிராஜா, சிறப்பு அதிதியாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) ரீ.உதயகரன், கோட்டக்கல்வி பணிப்பாளர் மண்முனை வடக்கு ஆர்.ஜே.பிரபாகரன், உதவிக்கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) வி.லவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலையின் பிரதி அதிபர், மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் பிரதி அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் அணி நடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்ததுடன், முதலாம் இடத்தை 291 புள்ளிகளைப் பெற்று சாரதா இல்லமும், இரண்டாம் இடத்தை 268 புள்ளிகளைப் பெற்று அருந்ததி இல்லமும், மூன்றாம் இடத்தை 259 புள்ளிகளைப் பெற்று நல்லாகினி இல்லம் பெற்றுக் கொண்டது.
மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!!
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 17, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 17, 2024
Rating:







கருத்துகள் இல்லை: