அரச கரும மொழிகள் ஆணைக்குழுவை இப்போ யாரு வைச்சிருக்காங்கன்னே தெரியல!
இந்த மாதிரி "மெல்ல தமிழ் சாகின்ற" போது, அது பற்றி, அறிவிக்க
அரச மொழிகள் ஆணைக் குழுவில் ஒரு பிரிவை உருவாக்கி, அதற்கு ஒரு "hotline""வட்ஸ்சப்" இலக்கத்தையும் தந்தோம்.
"பிழைகள்" பற்றிய பட தகவல்கள் வந்த உடன், நமது ஆணைக்குழு, அதுபற்றி அந்த பிரதேச செயலாளருக்கு, அறிவிக்க, அவர் அப்பகுதியில், அவரிடம் ஒப்பந்தம் செய்த ஒரு பெயர் பலகை நிறுவனத்துக்கு அறிவிப்பார்.
திருத்தி எழுதப்பட வேண்டிய பலகை "டிசைனை"யும், உரிய கட்டணத்தையும், அமைச்சிலிருந்து நாம் அங்கு அனுப்புவோம்.
ஒரு நிபந்தனை: புதிய "டிசைன்", அமைச்சருக்கு (#மனோகணேசன்) காட்ட பட்டு ஒப்புதல் பெற வேண்டும்.
எல்லாவற்றுக்கும் பொறுப்பாக பேராசிரியர் சந்திரசேகரனை ஆணைக்குழு தலைவராக நியமித்தும் இருந்தோம்.
நூற்றுக்கணக்கான "பலகை திருத்தங்களை" இப்படி செய்து படிப்படியாக எல்லாம் சரியாத்தான் போய் கொண்டு இருந்தது.
அப்புறம், ஆட்சி மாறி, 2019ல் "கோதா வீழ்ச்சி" வந்தது. அந்த அமைச்சு நான்கு பிரிவுகளாக உடைக்கப்பட்டு காணாமல் போனது.
இப்போது "அரச கரும மொழிகள் ஆணைக் குழுவை" யாரு வைச்சிருக்காங்கன்னே தெரியல!
முன்னாள் அமைச்சர் மனோகணேசன்
அரச கரும மொழிகள் ஆணைக்குழுவை இப்போ யாரு வைச்சிருக்காங்கன்னே தெரியல!
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 15, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 15, 2024
Rating:


கருத்துகள் இல்லை: