Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஸ்மார்ட் யூத் பாரம்பரிய விளையாட்டு விழா...2024

(உமர் அறபாத் ஏறாவூர்)

இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், ஏறாவூர் நகர பிரதேச செயலகம் மற்றும்  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஏறாவூர் நகர பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் என்பன இணைந்து நடாத்திய ஸ்மார்ட் யூத்  2024 புதுவருட பாரம்பரிய கலாசார விளையாட்டு விழா  (27-04-2024  சனிக்கிழமை) ஏறாவூர் ஆற்றங்கரை டாக்டர் அஹமட் பரீட் விளையாட்டு அரங்கில் ஏறாவூர் நகர பிரதேச செயலக இளைஞர் சேவை  உத்தியோகத்தர் எம்.ஐ.எம் .றம்ஷி தலைமையில் இடம் பெற்றது.


இலங்கை திருநாட்டின் அதிமேதகு கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவில் உருவான ஸ்மார்ட் யூத் 2024 பாரம்பரிய விளையாட்டு விழா நிகழ்வு நாடாளவிய ரீதியில் எல்லா இடங்களிலும் இடம்பெறுகின்றன.


ஏறாவூர் வாவிக்கரையில் தோணி ஓட்டத்துடன் ஆரம்பமான நிகழ்வில் அதிகளவான ஏறாவூர் மீனவர் சங்க அங்கத்தவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டணர்.


அதனைத் தொடர்ந்து பிற்பகல் வேளை ஆரம்பமான ஜனரஞ்சக விளையாட்டு விழாவில் பாரம்பரிய விளையாட்டுக்களான  தலையணை சமர்,சாக்கோட்டம்,சாயப்பானை உடைத்தல், கிடுகு பிண்ணுதல், தேங்காய் துருவுதல்,பலூன் ஊதி உடைத்தல்,மோட்டார் சைக்கிள் சங்கீத கதிரை,வினோத உடை,கயிறு இழுத்தல்,மெதுவான துவிச்சக்கர சைக்கிளோட்ட போட்டி  என பல்வேறு போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் ஏ.சி.ஏ.அப்கர் அஹமட் மற்றும் ஏறாவூர் நகரசபையின் விஷேட ஆணையாளரும் செயலாளருமான எச்.எம்.எம்.ஹமீம் அவர்கள் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்ததுடன்


ஏறாவூர் நகர பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர் கழக பிரதிநிதிகள், 
விளையாட்டு ஆசிரியர்கள் என பலர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும்  வழங்கி வைக்கப்பட்டன.


ஏறாவூர் பிரதேசத்தில் தோணி ஓட்டம் ,கிடுகு பிண்ணுதல், தலையணை சமர் போன்ற ஜனரஞ்சக விளையாட்டுப் போட்டிகள் நீண்ட இடைவெளியின் பின் இடம்பெற்றமையால் அதிகளவான பொதுமக்கள் பார்வையாளராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .
ஸ்மார்ட் யூத் பாரம்பரிய விளையாட்டு விழா...2024 Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 28, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.