Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பெருநாள் பசார் காத்தான்குடியில் ஏற்பாடு செய்யப்படாதது தொடர்பில் காத்தான்குடி நகர சபை விடுத்திருக்கும் அறிவிப்பு


அன்புப் பொது மக்களுக்கு காத்தான்குடி நகர சபை விடுக்கும் அறிவித்தல்.

கடந்த வருடம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வுகளில் ஆண் பெண் கலப்பு தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவினால் கவலை தெரிவிக்கப்பட்டு இருந்ததாலும் களியாட்டத்தை கண்டுகளிக்க வரும் மக்கள் செலுத்தும் நுழைவுச் சீட்டின் விலையைக் குறைக்கும் பொருட்டு நடத்துனருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்காததாலும் இம்முறை எமது பிதேசத்தில் களியாட்ட நிகழ்வுக்கு சபை அனுமதி வழங்கவில்லை என்பதை அறியத் தருகின்றோம்.

அத்துடன் பெருநாள் பசாரினை சபையுடன் இணைந்து புதிய காத்தான்குடி முகைதீன் பெரிய ஜும்மா பள்ளிவாயலால் ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நாடாத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் நகர சபையால் மைதான தயார்படுத்தல்கள் அனைத்தும் செய்யப்பட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் பள்ளிவாயல் எவ்வித அறிவித்தலும் இன்றி பின்வாங்கிய காரணத்தினால் இம்முறை பெருநாள் பசார் நடாத்தப்படவில்லை என்பதையும் பொதுமக்கள் கவனத்திற்கு தெரியப் படுத்துகின்றோம்.

மேலும் இனிவரும் காலங்களில் பெருநாள் பசாரினை நகர சபையால் ஏற்பாடு செய்வது என தீர்மானிக்கப் பட்டுள்ளது என்பதையும் பொதுமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

செயலாளர்
நகர சபை
காத்தான்குடி
2024.04.11
பெருநாள் பசார் காத்தான்குடியில் ஏற்பாடு செய்யப்படாதது தொடர்பில் காத்தான்குடி நகர சபை விடுத்திருக்கும் அறிவிப்பு Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 11, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.